தமிழக சட்டமன்ற தேர்தல்.. 4500 பேர் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல்.!

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு மொத்தம் 4,500 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Update: 2021-03-19 13:23 GMT

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு மொத்தம் 4,500 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.




 


தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கியது. இன்று மாலை 3 மணியுடன் நிறைவு பெற்றது. வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில், வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் பற்றிய விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் 3,818 ஆண்கள், 747 பெண்கள், 2 மூன்றாம் பாலினத்தவர் என்று மொத்தம் 4,500 பேர் போட்டியிடுவதற்கு விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.


 



இதில் சுயேட்சை வேட்பாளர்கள் அதிகளவு வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதே போன்று கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தலுக்கான விருப்பமனு தாக்கலும் இன்றுடன் நிறைவு பெற்றது.

Similar News