சட்டப்பேரவை தேர்தல்: சொந்த ஊர்களுக்கு செல்ல இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!
தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிப்பதற்கு வசதியாக சிறப்பு பேருந்து சேவைகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற (ஏப்ரல்) 6ம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னையில் பணிபுரிந்து வருகின்றனர்.
அது போன்றவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிப்பதற்கு வசதியாக சிறப்பு பேருந்து சேவைகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி இன்று முதல் வருகின்ற 5ம் தேதி வரை பிற ஊர்களுக்கு 14 ஆயிரத்து 215 சிறப்பு பேருந்துகளும், கோவை, திருப்பூர், சேலம், பெங்களூரு ஆகிய பகுதிகளில் இருந்தும் பல்வேறு ஊர்களுக்கு 2 ஆயிரத்து 644 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.