கர்நாடகாவில் அணை கட்டும் விவகாரம்: துரைமுருகனுக்கு மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் அளித்த உத்தரவாதம்.!
மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசிடம் கலந்தாலோசிக்காமல் அனுமதி அளிக்கப்படாது என்று மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் உறுதி அளித்துள்ளதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

டெல்லிக்கு சென்றுள்ள தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை இன்று சந்தித்து பேசினார். அப்போது, காவிரி ஆற்றின் குறுக்கே தமிழக எல்லையில் இருந்து அருகாமையில் உள்ள மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் திட்டம் தமிழகத்திற்கு பாதகத்தை விளைவிக்கும். எனவே தமிழக விவசாயிகள் நலனுக்கு எதிரானது எனக் கூறினார்.
அது மட்டுமின்றி பெண்ணையாற்றின் கிளை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டியுள்ளது குறித்தும் பேசப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.