ஊரக உள்ளாட்சி தேர்தல்: பா.ஜ.க. சார்பில் 381 பேர் வெற்றி ! - அண்ணாமலை பேட்டி!

நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட 381 பேர் வெற்றி பெற்றுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாலை கூறியுள்ளார்.

Update: 2021-10-19 02:06 GMT

நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட 381 பேர் வெற்றி பெற்றுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாலை கூறியுள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் சென்னை தி.நகரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதன் பின்னர் அண்ணாமலை மற்றும் நிர்வாகிகளுடன் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது அவர் பேசும்போது, பாஜக பொதுக்குழு உறுப்பினர் கல்யாணராமனை எவ்வித வாரண்டும் இல்லாமல் போலீசார் நள்ளிரவு நேரத்தில் கைது செய்துள்ளனர். கைது பற்றி கேட்க சென்ற மகளிர் அணி நிர்வாகியையும் அவமரியாதையுடன் நடத்தியுள்ளனர். எனவே அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழகத்தில் பிரதமர் மோடி மீது கடும் விமர்சனங்கள் செய்வோருக்கு எதிராக தமிழக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. கால்ஙகள் மாறும், காட்சிகள் மாறும் எனவே கட்சிகளை தாண்டி நேர்மையுடன் போலீசார் செயல்படவேண்டும் என்றார். மேலும், நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பில் 332 வார்டு உறுப்பினர்கள் மற்றும் 41 பஞ்சாயத்து தலைவர்கள் 8 ஒன்றிய கவுன்சிலர்கள் என்று மொத்தம் 381 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களுக்கு பாஜக சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

Source, Image Courtesy: Dinamalar


Tags:    

Similar News