"சமூக வலைதளத்தில் அரசியல் நடத்துபவர்கள் நாங்கள் இல்லை" - சட்டசபையில் பொய் கூறிய அமைச்சர் சேகர்பாபு

Breaking News.

Update: 2021-08-18 02:30 GMT

சமூக வலைதளங்களில் கோடிகளில் செலவு செய்து விளம்பரப்படுத்திவிட்டு வெற்றி பெற்ற கட்சி தி.மு.க ஆனால் "சமூக வலைத் தளங்களில் அரசியல் நடத்துபவர்கள்" என சட்டசபையில் குறிபிட்டு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான 2-வது நாள் விவாதம் நேற்று நடந்தது. அப்போது பேசிய ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. எழிலன், "அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் பற்றி சிலர் தவறான தகவல்களை பரப்புகிறார்கள். இதுபற்றி அறநிலையத் துறை அமைச்சர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்" என கூறினார்.

அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது, "அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற வரலாற்று சிறப்பு மிக்க திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். இதன்படி தமிழகத்தில் காலியாக இருந்த 58 இடங்களுக்கு அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சமூக வலைத் தளங்களில் அரசியல் நடத்துபவர்கள் மத்தியில் மக்களை தேடி அரசியல் செய்யும் தலைவராக நமது முதல்வர் உள்ளார்" என ஸ்டாலினை புகழ்ந்து பேசினார்.

மேலும் பேசிய அவர், "அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் சிலர் அவதூறுகளை பரப்புகிறார்கள். இது போன்ற உருட்டல், மிரட்டல்களுக்கெல்லாம் எங்கள் முதல்வர் பயப்படமாட்டார்" எனவும் பெருமை பொங்க பேசினார்.

சமூக வலைதளத்தில் "ஸ்டாலின்தான் வாராரு, விடியல் தரப்போராரு" என கோடிகளில் பணத்தை இறைத்து விளம்பரம் செய்து தேர்தலில் வெற்றி பெற்ற கட்சி தி.மு.க. அவ்வாறு இருக்கையில் சமூஎ வலைதளத்தில் அரசியல் நாங்கள் நடத்தவில்லை என அமைச்சர் சேகர்பாபு கூறுவது அப்பட்டமாக சட்டமன்றத்தில் பொய் கூறியதாகும்.

Maalaimalar

Tags:    

Similar News