குறைந்த விலையில் வீடு வாங்குவோருக்கு வரிச்சலுகை நீட்டிப்பு.. நிதியமைச்சர் தகவல்.!

குறைந்த விலையில் வீடு வாங்குவோருக்கு வரிச்சலுகை நீட்டிப்பு.. நிதியமைச்சர் தகவல்.!

Update: 2021-02-01 13:03 GMT

நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் 11 மணியளவில் தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட் காகிதம் இல்லாத டிஜிட்டல் வகையிலான பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் கூறப்பட்டுள்ளதாவது: குறைந்த விலையில் வீடு வாங்குவோருக்கான வட்டி வரிச்சலுகை மேலும் ஓராண்டு நீடிக்கப்படுகிறது.
இந்த சலுகையால் வீட்டுக்கடன் வட்டி ரூ.1.5 லட்சம் வரையில் வருமான வரியிலிருந்து விலக்கு பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்த சலுகையால் ஏழை, எளிய மக்கள் அதிகமானோர்கள் பயன்பெறுவார்கள் என கூறப்படுகிறது.

Similar News