₹50 கோடி சொத்துக்களை சுருட்டிய தி.மு.க கவுன்சிலர் - எதிர்த்த அப்பாவி பெண் மீது கொலைவெறி தாக்குதல்!

தென்காசி மாவட்டம், கடையம் அருகே நிலம், வீடுகளை அபகரித்த 13வது வார்டு கவுன்சிலர் ஒருவரை எதிர்த்து செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பிய தேவேந்திரகுல வேளாளர் பெண் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-11-05 03:02 GMT

தென்காசி மாவட்டம், கடையம் அருகே நிலம், வீடுகளை அபகரித்த 13-வது வார்டு கவுன்சிலர் ஒருவரை எதிர்த்து செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பிய தேவேந்திரகுல வேளாளர் பெண் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம், கடையம் அருகே சுமார் ₹50 கோடி மதிப்புள்ள நிலம் மற்றும் வீடுகளை அபகரித்துள்ள தி.மு.க நிர்வாகியிடம் இருந்து மீட்டுத்தர வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்லியாணபுரத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். தி.மு.க மாவட்ட பொறுப்பாளரும் கடையம் ஒன்றியம் 13-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவர் தி.மு.க பிரமுகர்கள் உதவியுடன் ஒன்றிய சேர்மேனாக பதவியேற்ற செல்லம்மாள் என்பவரை ராஜினாமா செய்ய வைத்துவிட்டு, ஒன்றிய சேர்மேனாக பதவியேற்றுள்ளார்.

இந்நிலையில், ஜெயக்குமார் தென்காசி, கடையம் சாலையில் கல்லியாணபுரத்தில் சுமார் ₹50 கோடி மதிப்பிலான ஒரு ஏக்கர் நிலம் மற்றும் அதில் இருக்கும் வீடுகளை அபகரித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதே போன்று, பூமாரி என்பவரின் பட்டா நிலத்தையும் அதிகாரிகளின் துணையோடு தனது பெயருக்கு மாற்றி வைத்துள்ள ஜெயக்குமார், ஒரு லட்சம் கொடுத்தால் மட்டுமே மீண்டும் பட்டாவை மாற்றி தருவதாக கூறியுள்ளார். இதனிடையே, அரசு சார்ந்த சலுகைகள் மற்றும் வேலைகள் வாங்கித்தருவதாக கூறி பலரிடம் ₹20 லட்சத்துக்கு மேல் மோசடி செய்துள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது. இது பற்றி காவல் நிலையம் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவு அதிகாரிகளிடம் புகார் மனுக் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், பாதிக்கப்பட்டவர்கள் கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தேவேந்திரகுல வேளாளர் பெண் பேட்டி அளிக்கையில், தி.மு.க கவுன்சிலர் ஜெக்குமார் வீட்டை எழுதி அவருடைய பெயருக்கு மாற்றிக்கொண்டார். ஒரு லட்சம் கொடுத்தால் மட்டுமே மீண்டும் திருப்பி பட்டா மாற்றித்தருவதாக கூறினார். நான் "எதற்கு பணம் தர வேண்டும். 3 பிள்ளைகளை வைத்துக்கொண்டு நான் எங்கே போவேன்?" என்று ஆவேசமாக கூறினார். மேலும், ஒன்றிய சேர்மேனாக பதவி ஏற்க இருப்பதாக தகவல் வருகிறது. அப்படி ஜெயக்குமார் பதவியேற்றால் நான் மற்றும் எனது பிள்ளைகளுடன் கடையம் ஒன்றிய அலுவலகம் முன்பாக தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறினார்.


இவர் பேட்டி அளித்த இரண்டு நாட்கள் கழித்து தி.மு.க-வினர் பெண் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். தி.மு.க-வின் ரவுடிசியத்தை காவல்துறை வேடிக்கை பார்க்குமா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Source & Image Courtesy: News J

Tags:    

Similar News