சென்னையில் பரபரப்பு: காவலர்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட அ.தி.மு.க. தலைமை அலுவலகம்.!
சென்னையில் பரபரப்பு: காவலர்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட அ.தி.மு.க. தலைமை அலுவலகம்.!;
சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவு பெற்ற சசிகலா, கடந்த மாதம் 27ம் தேதி விடுதலை ஆனார். இதனையடுத்து கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெங்களூருவில் தங்கியிருந்த சசிகலா இன்று காலை 8மணியளவில் சென்னைக்கு புறப்பட்டு சென்று கொண்டிருக்கிறார். அப்படி சென்னை செல்லும் சசிகலா மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் மற்றும் அதிமுக தலைமை அலுவலகம் செல்ல உள்ளதாகவும் தகவல்கள் பரவியது.
இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு வேண்டும் என்று அக்கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதன் காரணமாக ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. முன்அனுமதியின்றி யாரையும் கட்சி அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் ராயப்பேட்டை சாலை முழுவதும் பரபரப்பான காட்சிகள் நிலவி வருகிறது.