கேரளாவில் கொலை செய்த பயங்கரவாதிகளுக்கு தமிழகத்தில் இடம் அளிக்கக்கூடாது: தி.மு.க. அரசுக்கு பா.ஜ.க. எச்சரிக்கை!
மத அடிப்படைவாத பயங்கரவாதிகளுக்கான இருப்பிடமாக தமிழகம் மாறாமல் இருப்பதற்கு தமிழக அரசு மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.;
மத அடிப்படைவாத பயங்கரவாதிகளுக்கான இருப்பிடமாக தமிழகம் மாறாமல் இருப்பதற்கு தமிழக அரசு மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த வாரம் கேரளா மாநிலத்தில் மனைவி முன்பாக 27 வயது இளைஞர் சஞ்சித் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த கும்பல் தற்போது கோவைக்கு தப்பியிருக்கலாம் என்று கேரளா போலீசார் கூறியுள்ளனர். எனவே தமிழகத்தில் அது போன்றவர்கள் பதுங்கியிருக்கலாம் என்ற அச்சத்தில் விசாரணை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னரே தமிழகத்தில் நடந்த ராமலிங்கம், சசிகுமார் எஸ்.ஐ.வில்சன் படுகொலையில் மத அடிப்படைவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது கேரளாவில் சஞ்சித் என்ற இளைஞரை படுகொலை செய்துவிட்டு தமிழகத்துக்கு தப்பியுள்ளதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே மத ரீதியிலான பயங்கரவாதிகளுக்கு இருப்பிடமாக தமிழகம் மாறிவிடக்கூடாது என்ற அக்கறையுடன் போலீசாரும் தமிழக அரசும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மேலும் பயங்கவாதிகளுக்கு துணை போகின்ற அமைப்புகளை உடனடியாக தடை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Source, Image Courtesy: Dinamalar