தஞ்சை தேர் விபத்து, தி.மு.க. அரசு முன்னெச்சரிக்கை எடுக்காததே காரணம் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

Update: 2022-04-27 12:50 GMT

தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு கிராமத்தில் தேர் விபத்து குறித்து சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார். அப்போது திமுக அரசு போதுமான முன்னேற்பாடுகளை எடுக்காததே விபத்திற்கு காரணம் என்றார்.

ஒரு இடத்தில் தேர் திருவிழா நடைபெறும் பட்சத்தில் உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட வேண்டும். சாலைகள் முழுவதும் செப்பனிட வேண்டும். ஆனால் இது போன்ற எந்த ஒரு நடைமுறைகளையும் பின்பற்றப்படவில்லை.

எனவே இந்த விபத்து நடைபெறுவதற்கு திமுக அரசே காரணம். உடனடியாக உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். அரசு அறிவித்த 5 லட்சம் போதுமானதாக இல்லை. மேலும், அதிமுக சார்பில் உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றார். திருவிழா சமயங்களில் போதுமான பாதுகாப்பு வழங்காததால் அதிமுக வெளிநடப்பு செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Source: News 18 Tamilnadu

Image Courtesy: The New Indian Express

Tags:    

Similar News