150 மாணவர்களை கைது செய்திருப்பது தி.மு.க.வின் கையாலாகாதத்தனத்தையே காட்டுகிறது! - எஸ்.ஜி. சூர்யா கடும் தாக்கு!

முன்பு நடத்தியதை போன்று ஆன்லைன் வாயிலாக தேர்வு நடத்த வேண்டும் என்று மதுரை தமுக்கம் மைதானத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்திய சுமார் 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கைதுக்கு தமிழக பாஜக செய்தித்தொடர்பாக எஸ்.ஜி.சூர்யா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Update: 2021-11-18 11:45 GMT

முன்பு நடத்தியதை போன்று ஆன்லைன் வாயிலாக தேர்வு நடத்த வேண்டும் என்று மதுரை தமுக்கம் மைதானத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்திய சுமார் 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கைதுக்கு தமிழக பாஜக செய்தித்தொடர்பாக எஸ்.ஜி.சூர்யா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்று அதிகரித்த காரணத்தினால் கல்லூரிகள் மூடப்பட்டு முழுநேரமும் ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெற்று வந்தது. கலை அறிவியல் கல்லூரி உள்ளிட்ட மற்ற படிப்புகளில் தேர்வுகளானது ஆன்லைன் வாயிலாகவே நடத்தப்பட்டு வந்தது. இதனிடையே கொரோனா தொற்று குறைந்து மீண்டும் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் மாடல் தேர்வு முதல் அனைத்து வகையிலான தேர்வுகள் நேரடியாகவே நடைபெறும் என்று கல்லூரிகள் அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டது. இதற்கு மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. பாடம் நடத்துவது ஆன்லைனில் தேர்வு மட்டும் நேரடியாக வைப்பதா என்ற குற்றச்சாட்டை முன்வைத்து மதுரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதனிடையே மதுரை தமுக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சுமார் 150 மாணவர்களை திமுக அரசு காவல்துறையை வைத்து கைது செய்துள்ளது. மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இதற்கு அதிமுக, பாஜக கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.


இந்நிலையில், தமிழக பாஜக செய்தித்தொடர்பாளர் எஸ்.ஜி.சூர்யா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மாணவர்கள் ஆன்லைன் தேர்வு வேண்டும், நேரடி தேர்வு வேண்டாம் என்றால் அவர்களை அழைத்து பேச வேண்டும் புரிய வைக்க வேண்டும். அதைவிடுத்து 1000 மாணவர்கள் மீது வழக்கு பதிந்து, அதில் 150 பேரை கைது செய்து இருப்பது திமுக அரசின், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கையாலாகாதத்தனத்தையே காட்டுகிறது. இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News