'பா.ஜ.கவிற்கு குடியரசுத் தலைவர் முதல் வாய்ப்பு கிடைத்தவுடன் இஸ்லாமியரைதான் தேர்வு செய்தது' - அண்ணாமலை
இஸ்லாமிய பெண்களின் பாதுகாப்புக்காக பிரதமர் மோடியும் பா.ஜ.க'வும் செயல்படுவதாக பிற அரசியல் காரணம் ஆனால் அரசியல் காரணங்களுக்காக பா.ஜ.க'வை பற்றி பிறர் விமர்சிப்பதை ஏற்க வேண்டாம் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இஸ்லாமிய பெண்களின் பாதுகாப்புக்காக பிரதமர் மோடியும் பா.ஜ.க'வும் செயல்படுவதாக பிற அரசியல் காரணம் ஆனால் அரசியல் காரணங்களுக்காக பா.ஜ.க'வை பற்றி பிறர் விமர்சிப்பதை ஏற்க வேண்டாம் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக பா.ஜ.க சார்பில் பிரமாண்டமாக நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசுகையில், 'இஸ்லாமியர்களின் கடமைகளை முக்கியமாக கருதப்படும் ரமலான் நோன்பு தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறது அதுவும் புண்ணிய காலத்தில் நல்ல மனதுடன் நோன்பு இருக்கிறார்கள் இந்த புண்ணிய காலத்தில் உங்களுடன் கலந்து கொள்வதே பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.
மேலும் பா.ஜ.க'வை பற்றி தெரியாதவர்களும், தெரிந்தவர்களும் அரசியல் காரணங்களுக்காக பா.ஜ.க மாநிலத் தலைவரும், பா.ஜ.க'வினரும் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக கருதுகிறார்கள்! தமிழக பா.ஜ.க'வில் சிறுபான்மையினர் ஒரு அங்கமாக இருந்து வருகின்றனர், பலர் நீண்ட காலமாக பொறுப்புகளிலும் இருந்து வருகின்றனர். இந்தியாவில் அவரவர் கடவுள்களை விட்டுக்கொடுப்பதில்லை இதைத்தான் இந்தியா விரும்புகிறது அதுதான் பா.ஜ.க சித்தாந்தம் ஆனால் இந்த பா.ஜ.கவின் சித்தாந்தத்தை புரிந்து கொள்ளாமல் சிலர் உள்ளனர்.
பா.ஜ.க'வில் உள்ள இஸ்லாமியர்களுக்கு தேசியத்தை பற்றியும் முழுமையாக தெரியும் இஸ்லாத்தை பற்றியும் முழுமையாக தெரியும், எந்த கட்சியில் இஸ்லாமியர்கள் பங்கு உண்டு என்பதை தெரிந்து வைத்திருக்கிறார்கள். பா.ஜ.க'வில் அங்கம் வகிக்கும் இஸ்லாமியர்கள் பா.ஜ.க'வின் வளர்ச்சிக்கு ஆரம்பத்திலிருந்தே துணையாக இருக்கிறார்கள். ஆனால் தற்போது சில அரசியல் கட்சிகள் இஸ்லாமியர்களை வாக்கு வங்கிகளாக மட்டும் பயன்படுத்தி வருகின்றனர்' என்றார்.