மகாராஷ்டிரா சட்டமேலவை தேர்தலில் 5 இடங்களை தட்டி தூக்கிய பா.ஜ.க - சாதித்த தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிரா சட்டமேலவை தேர்தலில் பா.ஜ.க 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

Update: 2022-06-21 08:04 GMT

மகாராஷ்டிரா சட்டமேலவை தேர்தலில் பா.ஜ.க 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.


மகாராஷ்டிரா சட்ட மேலவையில் காலியாகும் பத்து இடங்களுக்கு நேற்று தேர்தல் நடந்த தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா போன்ற கட்சிகள் தலா 2 வேட்பாளர்களையும் 5 வேட்பாளர்களையும் நிறுத்தியிருந்தனர்.

இதில் பா.ஜ.க'வால் நான்கு இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற சூழலில் கூடுதலாக ஒரு வேட்பாளரை பா.ஜ.க களத்தில் இறக்கியது, பா.ஜ.க'வின் ஐந்தாவது வேட்பாளர் வெற்றி பெற கூடுதலாக 24 உறுப்பினர்களின் ஆதரவு தேவையாக இருந்தது.

காங்கிரஸ் கட்சியின் இரண்டாவது வேட்பாளர் வெற்றி பெற கூடுதலாக சுயேச்சை எம்.எல்.ஏ'க்களின் ஆதரவு தேவையாக இருந்தது. சிவசேனா கூட்டணி கட்சிகளை தக்கவைத்துக்கொள்ள போராடினர்.

இந்த நிலையில் பா.ஜ.க'வின் தேவேந்திர பட்னாவிஸ் இதில் முன்னின்று செயல்பட்டார். தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பாக துணை முதல்வர் அஜித் பவார் தங்களது கட்சி எம்.எல்.ஏ'க்கள் விலகிப் போய் விடக்கூடாது என்பதை தீவிரமாக கண்காணித்து வந்தார் இந்தநிலையில் நேற்று தேர்தல் நடந்தது.

இதில் வாக்களிப்பதற்காக புனேயில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த இரண்டு பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் ஆம்புலன்ஸ் மூலம் மும்பைக்கு அழைத்து வரப்பட்டனர். அதோடு பகுஜன் விகாஸ் கட்சியின் எம்.எல்.ஏ அமெரிக்கா சென்றிருந்தார், அவரை வாக்களிப்பதற்காக பா.ஜ.க அமெரிக்காவிலிருந்து வந்தது.

சிறையிலிருக்கும் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ'க்கள் அணில் தேஷ்முக், நவாப் மாலிக் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டை அணுகி வாக்களிக்க அனுமதி பெற முயன்று தோல்வியடைந்தனர்.

இத்தேர்தலில் 285 எம்.எல்.ஏ'க்கள் வாக்களித்தனர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த 7 எம்.எல்.ஏ'க்கள் உதவியாளர்கள் உதவியோடு வாக்களித்தனர் இதற்க்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த எதிர்ப்பை தேர்தல் கமிஷன் நிராகரித்தது.


தேர்தலில் பதிவான வாக்குகள் 2 மணிநேரம் கால அவகாசத்தில் எண்ணப்பட்டு பா.ஜ.க சார்பாக போட்டியிட்ட பிரவீன் தாரெக்கார், ராம் ஷிண்டே, ஸ்ரீகாந்த் பாரதியா, உமா கப்ரே, பிரசாத் லாட் ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.


ஏற்கனவே சமீபத்தில் நடந்த ராஜ்யசபை தேர்தலில் தேவேந்திர பட்னாவிஸ் கூடுதலாக ஒரு வேட்பாளரை நிறுத்தி 3 பேரையும் வெற்றி பெறச் செய்தார். தற்போது சட்டமேலவை தேர்தல் தேவேந்திர பட்னாவிஸ் தனது செல்வாக்கை நிரூபித்துக் காட்டியுள்ளார், இத்தேர்தலில் முடிவு அடுத்த சில மாதங்களில் நடக்கும் மும்பை மாநகராட்சி தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Source - Junior Vikatan

Similar News