'வருங்கால முதல்வரை சந்தியுங்கள்' - அண்ணாமலையை மாணவர்கள் மத்தியில் எடுத்து செல்லும் நிகழ்ச்சி

மாணவர்கள் மத்தியில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை எடுத்துச் செல்லும் விதமாக 'வருங்கால முதல்வரை சந்தியுங்கள்' என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வருகின்றனர் பா.ஜ.க'வினர்.

Update: 2022-07-14 01:55 GMT

மாணவர்கள் மத்தியில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை எடுத்துச் செல்லும் விதமாக 'வருங்கால முதல்வரை சந்தியுங்கள்' என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வருகின்றனர் பா.ஜ.க'வினர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வரும் 17 பா.ஜ.க சார்பில் மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் தாமரை மாநாடு நடக்கிறது, மாநாட்டை பிரமாண்டமாக நடத்த பா.ஜ.க'வினர் திட்டமிட்டு வருகின்றனர், இதில் ஒரு பகுதியாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையுடன் பள்ளி மாணவ, மாணவிகளை கலந்துரையாடல் செய்யும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதில் சில பள்ளி மாணவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து வருகின்றனர். அவர்களுக்கு வழங்கப்படும் குலுக்கல் அட்டையில் வருங்கால முதல்வரை சந்தியுங்கள் என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, தமிழகத்தில் பா.ஜ.க'வினர் ஆட்சி அமைக்க மும்முரமாக வேலை செய்து வரும் நிலையில் அண்ணாமலை முதல்வர் வேட்பாளராக மாணவர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் அடையாளம் காட்ட தீவிரமாக வேலை செய்து வருவது இதன் மூலம் தெரிகிறது.

இது குறித்து மாவட்ட தலைவர் செந்தில்வேல் கூறியதாவது, 'கட்சியின் மாநில தலைவர் ஆரோக்கியமான அரசியலை முன்னெடுத்து வருகிறார். அவருடைய கருத்துக்கள் மாணவர்களின் சமுதாயத்தில் சென்றடைய வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்' என தெரிவித்தார்.  


Source - Dinamalar

Similar News