தி.மு.க'வை கிளீன் பண்ணி தூக்கி எறிவதுதான் வேலையே - அடித்து சொல்லும் அமர் பிரசாத் ரெட்டி

'அடுத்த தேர்தலில் தி.மு.க'வை கிளீன் பண்ணி தூக்கி எறிவதுதான் பா.ஜ.க'வின் வேலையே' என பா.ஜ.க'வின் அமர் பிரசாத் ரெட்டி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2022-06-25 05:38 GMT

'அடுத்த தேர்தலில் தி.மு.க'வை கிளீன் பண்ணி தூக்கி எறிவதுதான் பா.ஜ.க'வின் வேலையே' என பா.ஜ.க'வின் அமர் பிரசாத் ரெட்டி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

2024 தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியலில் பா.ஜ.க பம்பரமாக சுழன்று வருகிறது, இந்த நிலையில் தமிழகத்தில் 25 எம்.பி'க்களை பா.ஜ.க கைப்பற்றும் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கூறிவருகிறார்.

இந்த சூழலில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பா.ஜ.க'வை சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 'பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை இந்தியா முழுவதும் காங்கிரஸ் ஆதிக்கம் இருந்தது, மாநிலக் கட்சிகளின் ஆதிக்கம் இருந்தது ஆனால் இப்போது அதை எல்லாம் முடித்துவிட்டு பா.ஜ.க மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது.

இங்கு திராவிட கட்சிகள் உள்ளது என்கிறார்கள் திராவிடம் என்பது ஒரு வெங்காயம் அது உரிக்க உரிக்க ஒன்றுமே இருக்காது இதை நான் சொல்லவில்லை எங்கள் மாநிலத் தலைவர் அண்ணாமலை சொல்லி இருக்கிறார்.

திராவிடம் என்ற வெங்காயத்தை உரித்து விட்டோம் கடைசியாக ஒரே ஒரு தோல் தான் இருக்கிறது அதை உரித்து பார்த்தால் கோபாலபுரம் குடும்பம் மட்டும்தான் இருக்கும். ஏகப்பட்ட ஊழல் செய்திருக்கிறார்கள் மக்கள் அதையெல்லாம் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் உங்கள் வீட்டிலிருந்து ஒருவர் திருடிக் கொண்டு போனால் அதை பொருத்துக் கொள்வீர்களா?

புள்ளி விபரத்துடன் ஆதாரத்தோடு எங்கள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கணித்துச் சொல்கிறார் அடுத்த 2024 தேர்தலில் 25 எம்.பி'க்களை நாடாளுமன்றத்திற்கு பா.ஜ.க சார்பில் அனுப்புவோம் என.

ஆனால் என்னுடைய ஆசை நாங்கள் தி.மு.க'வை துடைத்தெறிவோம்,மக்களுக்கு இவர்களை பிடிக்கவே இல்லை ஏன் இவர்களுக்கு ஓட்டு போட்ட மக்கள் புலம்புகிறார்கள்' எனக் கூறினார் அமர் பிரசாத் ரெட்டி. 

Similar News