பயிர் கடன் தள்ளுபடியை பேரவையிலேயே கெத்தாக அறிவித்தார் முதலமைச்சர்.. அமைச்சர் செங்கோட்டையன்.!

பயிர் கடன் தள்ளுபடியை பேரவையிலேயே கெத்தாக அறிவித்தார் முதலமைச்சர்.. அமைச்சர் செங்கோட்டையன்.!

Update: 2021-02-06 15:52 GMT

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டது. இதனிடையே கொரேனா தொற்று படிப்படியாக தமிழகத்தில் குறைந்து வரும் நிலையில் கடந்த ஜனவரி 19ம் தேதி 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளி திறந்த உடன் மாணவர்கள், ஆசிரியர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு வருகை தந்தனர்.

இதனையடுத்து வருகின்ற பிப்ரவரி 8ம் தேதி முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. பெற்றோர் கையொப்பம் இட்ட கடிதத்துடன் வரவேண்டும் என அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், திருப்பூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: மாணவர்களின் கல்வி சிறக்க வேண்டும் என்பதற்காகவே பள்ளிகள் திறக்கப்படுகிறது. விருப்பம் இருக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் எனக் கூறினார். 

மேலும், பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது, தேர்தல் சமயங்களில்தான் இது போன்ற அறிவிப்புகள் வெளியாகும். ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேரவையிலேயே தள்ளுபடி குறித்து அறிவிப்பு வெளியிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News