கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்க ராகுலுக்கு தடை - பார்ட்டியில் கலந்து கொண்டது காரணமா?
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அரசியலை புகுத்துவதற்காக செல்லும் மாநிலங்களில் மாணவர்கள் மத்தியில் உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். படிக்கின்ற மாணவர்கள் மத்தியில் தனது சித்தாந்தத்தை புகுத்துவதாக ஏற்கனவே அரசியல் கட்சியினர் இவர் மீது குற்றம் சுமத்தியது.
இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தில் ஒரு கல்லூரியில் மீண்டும் ராகுல் காந்தி பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்துவதற்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்தது. இந்த கலந்துரையாடலுக்கு தற்போது நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.
அதாவது விரைவில் தெலங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் வர உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தற்போது இருந்தே பிரச்சாரம் செய்வதற்கான உத்திகளை வகுத்து வருகிறது. அதே போன்று காங்கிரஸ் கட்சியும் தனது பங்கிற்கு ராகுல் காந்தியை வரவழைத்து கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடுவதற்கு ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. அதாவது தெலங்கானா மாநிலம் உருவாக போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களின் குடும்பத்தாரை சந்திக்க இருக்கிறார். இதற்கு அந்த பல்கலைக்கழகம் அனுமதி வழங்கவில்லை. இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் காங்கிரஸ் ஆதரவு பெற்ற மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் மாணவர்கள் உரையாடல் நிகழ்ச்சியில் அரசியல் சாயம் இல்லை என்று சொல்ல முடியாது. அது மட்டுமின்றி பல்கலைக்கழகத்தை அரசியல் தளமாக பயன்படுத்துவதற்கு அனுமதிக்க முடியாது. எனவே பல்கலைக்கழக நிர்வாகத்தின் செயலை மீறும் வகையில் இருப்பதாக கூறி, ராகுல் நிகழ்ச்சிக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தீர்ப்பால் காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Source, Image Courtesy: Asianetnews