பிளவு மற்றும் குழப்பமான கட்சியால் நாட்டிற்கு எதுவும் செய்ய முடியாது.. காங்கிரஸ் மீது பிரதமர் தாக்கு.!
பிளவு மற்றும் குழப்பமான கட்சியால் நாட்டிற்கு எதுவும் செய்ய முடியாது.. காங்கிரஸ் மீது பிரதமர் தாக்கு.!;
குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி மக்களவையில் இன்று உரையாற்றினார். பிரதமர் உரையின்போது எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ளவில்லை.
டெல்லியில் கடந்த 2 மாதங்களாக புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் என்ற போர்வையில் சதிகாரர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். அவர்களின் உண்மையான முகம் கடந்த 26ம் தேதி நடந்த வன்முறை சம்பவங்களில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்நிலையில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். இதனிடையே பிரதமர் மோடி பேசும்போது, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சி வெவ்வேறு வகையான நிலைப்பாடுகளை எடுத்து வருகிறது. இது போன்ற பிளவுபட்ட மற்றும் குழப்பமான கட்சி நாட்டிற்கு எந்த நன்மையும் செய்ய முடியாது. சபையை திட்டமிட்டு சீர்குலைத்து வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.