ஆட்சி காலத்தில் தவறவிட்டவைகளை பொய் வாக்குறுதிகளாக்கும் தி.மு.க!

ஆட்சி காலத்தில் தவறவிட்டவைகளை பொய் வாக்குறுதிகளாக்கும் தி.மு.க!

Update: 2021-02-09 08:23 GMT

முல்லை பெரியாறு திட்டத்தை வைத்து சிவகங்கை மக்களை நம்ப வைக்கும் பிரச்சாரத்தை நேற்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் மேற்கொண்டார்.  
"விவசாயத்திற்கு முக்கியமான முல்லைபெரியாறு திட்டம் சிவகங்கை மாவட்டத்திற்கு கொண்டு வரப்படும்" என அவர் பிரச்சாரத்தில் தெரிவித்தார். 

இன்னும் 3 மாதங்களில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தி.மு.க'வும் தன் பங்குக்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. எப்படியாவது வாக்குகளை பெற்று முதலமைச்சர் ஆகிவிட வேண்டும் என ஸ்டாலின் துடியாக பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். அதன் காரணமாக வாக்குறுதிகளை அள்ளி தெளித்து வருகிறார்.

நேற்றைய தி.மு.க பிரச்சாரம் சிவகங்கையில் நடைபெற்றது. அதில் பேசிய தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறியதாவது, "அ.தி.மு.க அரசு தமிழர்களின் பெருமைகளை அழிக்க நினைக்கும் மத்திய அரசுடன் கூட்டு வைத்துள்ளது. சட்டசபை தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் மீண்டும் சமத்துவபுரம் அமைத்து தரப்படும்.

கருணாநிதி ஒரு திட்டத்தை கொண்டு வந்தார் என்றால் அதை அ.தி.மு.க ஆட்சி நிறுத்திவிடும். விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசியவர்தான் முதலமைச்சர் பழனிசாமி. விவசாயத்திற்கு முக்கியமான முல்லைபெரியாறு திட்டம் சிவகங்கை மாவட்டத்திற்கு கொண்டு வரப்படும். எதுவும் செய்யாததுதான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெரிய சாதனை.

மக்களை பற்றி எடப்பாடி பழனிசாமிக்கு எந்த கவலையும் இல்லை. முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிர்கால கனவு இல்லை” என பேசினார்.

தமிழகத்தில் ஐந்து முறை ஆட்சி கட்டிலில் அமர்ந்துவிட்டு முல்லை பெரியாறு திட்டத்தை அமல்படுத்தாமல் விட்டுவிட்டு தற்பொழுது ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என கபட நாடகம் ஸ்டாலின் ஆடுவதாக தெரிகிறது என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Similar News