போன உடனே வெளிநடப்பு செய்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்.!

போன உடனே வெளிநடப்பு செய்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்.!

Update: 2021-02-02 11:48 GMT

இன்று தமிழக சட்டப்பேரவை கூடிய நிலையில், ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து கலைவாணர் அரங்கத்திற்குள் சென்ற திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் உடனே வெளிநடப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டுதோறும் ஜனவரி முதல் வாரத்தில் தமிழக சட்டப்பேரவை கூடும். ஆனால் இந்த முறை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிப்ரவரி மாதம் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. கொரோனா தொற்று காரணமாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவை நடைபெற்று வருகிறது. இந்த கூட்டம் சட்டமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் ஆகும். மேலும், இந்த கூட்டத்தொடரில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டத்தில் ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அதே போன்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களும் பேரவை நிகழ்ச்சிக்கு வருகை புரிந்தனர். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்தினார். அப்போது பேரவை வளாகத்திற்குள் இருந்த திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

ஒவ்வொரு முறையும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் சட்டப்பேரவையை விட்டு வெளிநடப்பு செய்வது வாடிக்கையாகிவிட்டது. ஓட்டு போட்ட மக்களுக்கு திமுகவினர் நாமத்தை போட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News