இந்து அடையாளம் எங்களுக்கு வலியை தருகிறது - தி.மு.க. அரசுக்கு வி.சி.க. எம்.எல்.ஏ கோரிக்கை!
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி தொடங்கிய துறை வாரியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதன்படி சட்டப்பேரவையில் விசிக எம்.எல்.ஏ., சிந்தனை செல்வன் சில கோரிக்கைகளை முன்வைத்தார்.
அதாவது கிராமத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற வேண்டும் என்றால் கிராம நிர்வாக அலுவலர் கிராமத்திலேயே தங்க வேண்டும். அதற்காக அரசு சார்பில் குடியிருப்பு அமைத்து தந்து விஏஓ கிராமத்திலேயே தங்கியிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், இந்து ஆதிதிராவிடம் என்ற அடையாளம் எங்களுக்கு வலியை தருகிறது. சமயம் சார்ந்துள்ள இந்த அடையாளத்தை வருவாய் நிர்வாகம்தான் வழங்கி வருகிறது. இந்து ஆதிதிராவிடம் என்பதற்கு பதிலாக ஆதிதிராவிடம் தமிழர் மரபு, ஆதிதிராவிடம் பௌத்த மரபு, வள்ளலார் மரபு உள்ளிட்டவைகளில் தங்களை தாங்களே பண்பாட்டு வழியில் அடையாளம் படுத்திக்கொள்வதற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும். இந்து என்கின்ற அடையாளத்தை கட்டாயப்படுத்தக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
Source: News 18 Tamilnadu
Image Courtesy: Nakkheeran