பிரமாண்டமாக கட்டப்பட்ட அ.தி.மு.க. அலுவலகம்: திறப்பு விழாவிற்கு டெல்லி செல்லும் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்.!

பிரமாண்டமாக கட்டப்பட்ட அ.தி.மு.க. அலுவலகம்: திறப்பு விழாவிற்கு டெல்லி செல்லும் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்.!;

Update: 2021-02-09 16:54 GMT

அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளுக்கு தலைநகர் டெல்லியில் மத்திய அரசு இடம் ஒதுக்கியுள்ளது. அந்த இடத்தில் அரசியல் கட்சிகள் தங்களது அலுவலக கட்டுமான பணியில் ஈடுப்பட்டு வருகிறது. அந்த வகையில் அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் 3 மாடிகளை கொண்ட பிரமாண்டமான முறையில் அலுவலகத்தை கட்டி முடித்துள்ளது.

இந்நிலையில், அதிமுக அலுவலக திறப்பு விழா வருகின்ற 21ம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஒரு மாடியில் எம்.ஜி.ஆர். புகைப்பட கண்காட்சியும், மற்றொரு மாடியில் ஜெயலலிதா புகைப்பட கண்காட்சியும் அமைக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி கூட்ட அரங்கம், நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தங்குவதற்கான அறைகளும் தனித்தனியாக கட்டப்பட்டுள்ளன. இந்த பணிகள் தற்போது முடியும் நிலையில் உள்ளதால் இதற்கான திறப்பு விழா வருகின்ற 21ம் தேதி நடைபெறுகிறது.

இந்த அலுவலகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் இணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைப்பதற்காக வருகின்ற 20ம் தேதி டெல்லி செல்கின்றனர். அப்போது சசிகலா வருகை தொடர்பாகவும் மத்திய அமைச்சர்களுடன் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News