அனுமதி பெறாமல் திருச்சியில் போராடிய தி.மு.கவினர் - அலேக்காக அனைவரையும் தூக்கிய காவல்துறை.!

அனுமதி பெறாமல் திருச்சியில் போராடிய தி.மு.கவினர் - அலேக்காக அனைவரையும் தூக்கிய காவல்துறை.!

Update: 2020-12-07 09:09 GMT

ஊருக்கெல்லாம் அறிவுரை கூறி மணிக்கணிக்கில் பேசும்  தி.மு.க'வினர் தன் கட்சியில் நடக்கும் தவறுகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அந்த வகையில் திருச்சியில்  கொரோனோ விதிகளை காற்றில் பறக்கவிட்டு 
அரசு அனுமதியில்லாமல் ஊரடங்கு நேரத்தில் கூட்டம் நடத்தியதால், அன்பில் மகேஷ் உள்ளிட்ட தி.மு.க வினர் 1,250 பேர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறது காவல்துறை. 

திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க தெற்கு மாவட்டச் செயலாளரும் திருவெறும்பூர் சட்ட மன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ், லால்குடி சட்ட மன்ற உறுப்பினர் செளந்தரப்பாண்டியன், துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், தி.மு.க வடக்கு மாவட்டச் செயலாளர் தியாகராஜன், மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாகச் சட்டமன்ற உறுப்பினர்கள் மகேஷ் பொய்யாமொழி, செளந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார் உள்ளிட்ட 1,250 பேர் மீது கோட்டை காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து அலேக்காக தூக்கியுள்ளனர்.

ஊரெல்லாம் ஒருபுறம் மழை நேர அவஸ்தையிலும், மறுபுறம் கொரோனோ பயத்திலும் வாழ்ந்து வருகையில் தி.மு.க'வினர் மட்டும் அரசியல் லாபத்திற்காக, ஆளும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான பிம்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் வரும் வெறுப்பு வாக்குகளை வாங்கி வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற இதுபோன்ற போராட்டங்களை மக்கள் பாதுகாப்பு கருதாமல் நடத்துவதால் மக்கள் தி.மு.க மீது வெறுப்பில் உள்ளனர்.

Similar News