கர்நாடக மக்களும், தமிழர்களும் சகோதரர்களாகவே உள்ளனர்! மதுரையில் அமைச்சர் ஈஸ்வரப்பா பேட்டி!
கர்நாடகா மாநில உள்ளாட்சித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா நேற்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை புரிந்தார். இதன் பின்னர் அவர் கோயிலில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமியை தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் சார்பில் குங்குமம், விபூதி பிரசாதங்கள் அளிக்கப்பட்டது.

இதன் பின்னர் தரிசனம் முடித்துக்கொண்டு வெளியே வந்த அமைச்சர் ஈஸ்வரப்பா, செய்தியாளர்களிடம் பேசும்போது, கர்நாடகாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையில் எந்த பிரச்சனையும் இல்லை. இரண்டு மாநில மக்களும், சகோதர, சகோதரிகளாக உள்ளனர். காவிரி விவகாரத்தில் அரசியல் செய்யப்படுகிறது. காவிரி நடுவர் நீதிமன்ற தீர்ப்பை இரண்டு பேரும் கடைபிடிக்க வேண்டும்.
அதில் சிலர் வேண்டும் என்றே பிரச்சனையை உருவாக்கி குளிர்காய்கின்றனர். இதில் எவ்வித பிரச்சனையும் இல்லை. எனவே தமிழகமும், கர்நாடகமும், நீதிமன்ற உத்தரவுகளை மதிக்க வேண்டும். காவிரி மிகவும் தூய்மையாக உள்ளது. இரண்டு மாநில விவசாயிகளையும் காவிரி ஆசீர்வதிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Dailythanthi