காங்கிரஸ் அரசுக்கு ஏற்பட்டதுதான் தி.மு.க.விற்கும் ஏற்படும்: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எச்சரித்த அண்ணாமலை!

Update: 2022-05-30 13:12 GMT

தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எந்த கமிட்டி வந்தாலும் யார் முயற்சி செய்தாலும் படுகரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க முடியாது என்று தி.மு.க. அமைச்சர் ராமச்சந்திரன் சொல்லியிருப்பது வேதனைக்குரிய செய்தி.

படுகர்கள் அனைத்து துறையிலும் முன்னேறி விட்டார்கள். எல்லோரும் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். இதுபற்றி படுகர்கள் பெருமைப்பட வேண்டுமே தவிர அரசு சலுகைகளை எதிர்பார்க்கக்கூடாது படுகர்கள் பழங்குடியினர் பட்டியலில் இடம் பெற வாய்ப்பே இல்லை என்று அறிவாலயம் தி.மு.க. அரசின் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசியுள்ளார்.

தி.மு.க.வினர் இப்படித்தான் ஜம்மு காஷ்மீரில் ஆர்ட்டிகள் 370 ஐ ரத்து செய்ய முடியாது, முத்தலாக் தடை சட்டம் வரவே வராது இந்தியாவில் ஒரே மாதிரியான வரி விதிப்பை கொண்டுவர முடியாது. வடகிழக்கில் பா.ஜ.க. ஆட்சிக்கு வர முடியாது. தாமரை மலராது, அயோத்தி பிரச்சினை தீராது நீட் தேர்வு நடக்காது என்றெல்லாம் ஏகபடியும் பேசிய தி.மு.க.வினர் அதே வரிசையில் சொல்லி இருக்கும் மற்றுமொரு பொய் பகர் இனத்தவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க முடியாது என்று பேசியுள்ளார்.

இதுவரை தொடர்ந்து ஆட்சியில் இருந்த தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி மத்திய, மாநில ஆட்சிப்பொறுப்பில் பலமுறை இருந்தபோதும் ஏன் படுக இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை ஆட்சியில் இருந்த காலங்களில் எல்லாம் படுகர் இன மக்களின் நியாயமான கோரிக்கைகளை எல்லாம் மறுத்து காலங்காலமாக தி.மு.க. அரசு தடுத்த வந்தது.

தமிழகம் முழுவதும் மாநில அமைச்சர் ராமச்சந்திரன் அவர்களின் பொறுப்பற்ற பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்தவுடன் தன்னுடைய நிலைப்பாட்டை மாட்டிக் கொண்டு மாற்றிக்கொண்டு, வழக்கம்போல மத்திய அரசின் மீது பழியை போட்டு, பா.ஜ.க. இருக்கும் வரை படுகர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க இயலாது என்றுதான் தான் தெரிவித்ததாக, மாற்று பேசி நீலகிரி குன்னூர் ஜெகதளா அரசு பள்ளியில் தான் பலர் முன்னிலையில் பேசிய பேச்சினைத் தானே மறுக்கிறார்.

புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில், அப்போதைய தொட்டதற்கெல்லாம் மத்திய அரசின் மீது பழி சொல்லி, மாநில நலனை மறந்து மத்திய அரசுடனும் மாநில, ஆளுநருடனும் மோதல் போக்கினை தொடர்ந்து, தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை பணம் தரவில்லை. பல காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் ரசிக்கவில்லை அதே பாணியில் தொடர்ந்து செயல்பட்டு வரும் தி.மு.க. அரசின் பொய்யுரைகள், மக்களை எரிச்சல் படுத்தி, அடுத்த முறை பா.ஜ.க.வை ஆட்சியில் அமர்த்தி புதுச்சேரியில் நடந்ததை தமிழகத்திலும் நடத்திக்காட்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.

பாரதிய ஜனதா கட்சி படுகர் இன மக்களையும் அவர்கள் சார்ந்திருக்கும் அமைப்புகளையும் சந்தித்து பேசியிருக்கிறது ஒரு தரப்பினரை டெல்லியில் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசவும் வைத்திருக்கிறது. பழங்குடியினர் சமுதாயத்தில் முக்கியமான பல பிரிவினர் பா.ஜ.க.வுடன் தொடர்பில் இருக்கிறார்கள். பல ஆண்டுகளாக தி.மு.க. கூட்டணி ஆட்சியில், அதிகாரமும் பதவியும் இருந்தும், செய்ய மனமின்றி தி.மு.க.வால் ஒதுக்கப்பட்ட, தமிழக பழங்குடியின மக்களுக்காக, அவர்களுடைய கோரிக்கைகள் விரைவில் நிறைவேற தமிழக பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து பாடுபடும். இவ்வாறு அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Asianetnews

Tags:    

Similar News