உத்தவ் தாக்ரே அரசுக்கு நாளை மலை 5 மணிக்கு நேரம் குறிப்பு - தப்புமா? மண்ணை கவ்வுமா?

உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா அரசு நாளை பெரும்பான்மை நிரூபிக்க மகாராஷ்டிரா ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-06-29 10:59 GMT

உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா அரசு நாளை பெரும்பான்மை நிரூபிக்க மகாராஷ்டிரா ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்.எல்.ஏக்கள் அசாமில் முகாமிட்டுள்ளனர் மொத்தம் 48 எம்.எல்.ஏ'க்கள் உத்தவ் அரசின் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மகாராஷ்டிரா சட்டப் பேரவையில் நாளை சிறப்பு கூட்டத்திற்கு அம்மாநில ஆளுநர் பகத்சிங் அழைப்பு விடுத்துள்ளார். இதில் உத்தர தாக்கரே தலைமையிலான அரசு பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார். மாலை 5 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறும், அந்த வாக்கெடுப்பு முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



Source - News 18 Tamil Nadu

Similar News