'பிராமண வெறுப்பு பேச்சு இனி இருக்கக்கூடாது' -தி.மு.க'விற்கு எதிராக களத்தில் குதித்த பிராமண சங்கம்
பிராமண வெறுப்பு பேச்சுக்களை கைவிடுங்கள் என முதல்வர் ஸ்டாலினுக்கு தி.மு.க'வினர் கைவிட வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பிராமண வெறுப்பு பேச்சுக்களை கைவிடுங்கள் என முதல்வர் ஸ்டாலினுக்கு தி.மு.க'வினர் கைவிட வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பார்ப்பன ஆதிக்கம், பார்ப்பனத் திமிர் என்பது போன்ற கருத்துக்களை தி.மு.க'வினர் அடிக்கடி உபயோகித்து வருவதால் இது குறித்து தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.
இதன்காரணமாக தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 'சமீபகாலமாக தி.மு.கவைச் சேர்ந்த ஒரு சில நிர்வாகிகள் பிராமண சமூகத்தை தாக்கிப் பேசுவது, சம்பந்தமில்லாமல் சாடுவது அதிகரித்துள்ளது.
தி.மு.க'வின் பேச்சாளர் ராஜீவ் காந்தி சமீபத்தில் பிராமணர்களை இனப்படுகொலை செய்து இருக்க வேண்டும் என்றும நாகரிகமாகவும் சட்டத்திற்குப் புறம்பாகவும் பேசியதை தமிழ்நாடு பிராமணர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
தி.மு.க'வின் அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம் பிராமண சமூகத்தைச் சாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார், பிராமண சமூகத்தின் பெயரை இழுப்பது என்பது பகுத்தறிவு சார்ந்த செயல் அல்ல என்பதை அவர் உணர வேண்டும்.
தி.மு.க'வின் பிராமண வெறுப்பு பேச்சுக்களை தமிழ்நாடு பிராமணர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது, இதுபோன்ற செயல்களில் தி.மு.க'வினர் ஈடுபடக்கூடாது என்றும் தி.மு.க தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கண்டிப்புடன் அறிவுரை வழங்க வேண்டும் என தமிழ்நாடு பிராமணர் சங்கம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது' என அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.