தி.மு.க., ஆட்சியில் குப்பை எரிக்கும் இடமாக மாறிய கோயில் குளம்.. மீண்டும் புதுப்பொலிவுடன் குளத்தை அமைத்த அ.தி.மு.க.!

தி.மு.க., ஆட்சியில் குப்பை எரிக்கும் இடமாக மாறிய கோயில் குளம்.. மீண்டும் புதுப்பொலிவுடன் குளத்தை அமைத்த அ.தி.மு.க.!

Update: 2021-01-08 17:42 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த திமுக ஆட்சி காலத்தில் எதுவுமே சரியாக செய்ததில்லை என்ற குற்றச்சாட்டு மக்கள் மனதில் நீங்கா வடுவாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் குறிப்பிடும்படியாக சொல்ல வேண்டும் என்றால் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் சிவன் கோயில் உள்ளது. இந்த கோயில் அருகாமையில் குளம் ஒன்று உள்ளது.

இந்த குளத்தை திமுக ஆட்சியின்போது குப்பை எரிக்கும் இடமாக மாற்றி வைத்தனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த மனவருத்தத்துடன் சென்றனர். இது பற்றி அப்போதைய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக அமைச்சராக இருந்த பொன்முடியிடம் மக்கள் பல முறை கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் அதனை காதில் வாங்காமல் இருந்து வந்தார்.

மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அப்பகுதியில் இருந்து குப்பைகள் அனைத்தும் அகற்றப்பட்டது. இதனை அதிமுக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மேற்பார்வையில் நடந்ததாக கூறப்படுகிறது. குப்பைகள் அனைத்தும் அகற்றப்பட்டு, அந்த இடம் முழுவதும் புதுப்பொலிவுடன் குளம் அமைக்கப்பட்டது. அந்த இடத்தை சுற்றியும் நடைபயிற்சி செய்வதற்கா அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், குழந்தைகள் விளையாடும் பூங்கா, இளைஞர்கள் உடற்பயிற்சி செய்வதற்கான இடம், மற்றும் ஆவின் பாலகம், செயற்கையாக தண்ணீர் ஊற்றும் குற்றால அருவி என பல வகைகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் திறந்து வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News