துணைத்தலைவர் பதவியை பிடிக்க ரூ.1 லட்சம் பணத்தை வீதியில் வீசியெறிந்த பெண்!
உளூந்தூர்பேட்டை அருகே துணைத்தலைவர் பதவியைக் கைப்பற்றுவதற்காக வாங்கிய ஒரு லட்சம் பணத்தை போட்டியாளர் வீட்டின் முன்னர் பெண் வார்டு உறுப்பினர் வீசி விட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உளூந்தூர்பேட்டை அருகே துணைத்தலைவர் பதவியைக் கைப்பற்றுவதற்காக வாங்கிய ஒரு லட்சம் பணத்தை போட்டியாளர் வீட்டின் முன்னர் பெண் வார்டு உறுப்பினர் வீசி விட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள நன்னாவரம் ஊராட்சித் தலைவர் தேர்தலில் கலியமூர்த்தி என்பவர் வெற்றி பெற்றார். நாளை (அக்டோபர் 20) தேதி பதவியேற்க நிலையில் ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் ஒன்பது பேரில் துணைத்தலைவர் பதவிக்கு போட்டி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதில் வார்டு உறுப்பினர்களாக வெற்றி பெற்ற சந்திரபாபு ஆறுமுகம் இடையே கடுமையான போட்டி நிலவியுள்ளது. இதற்காக இரண்டு தரப்பினரும் பணத்தை தண்ணீயாக இறைத்து வருகின்றனர்.
இந்நிலையில், சந்திரபாபு ஆதரவாளர்கள், துணைத்தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று ஆறுமுகத்தை மிரட்டியதாக கூறப்படுகிறது. இது ஆறுமுகத்தின் வார்டு உறுப்பினர் அனுஷியாவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இதனால் சந்திரபாபுவிடம் பெற்ற ஒரு லட்சம் ரூபாயை திருப்பி கொடுப்பதற்காக அவரது வீட்டிற்கு நேற்று காலை 10 மணிக்கு அனுஷியா சென்றார். ஆனால் சந்திரபாபு பணத்தை திருப்பி வாங்க மறுத்து தனக்கே ஆதரவு அளிக்குமாறு கூறினார். ஆனால் அனுஷியா ஆதரவு கொடுக்கமாட்டேன் என்றுக்கூறி ஒரு லட்சம் பணத்தை சந்திரபாபு வீட்டின் முன்னர் வீசி விட்டு சென்றார். இதனை அப்பகுதி மக்கள் பார்த்து வியப்படைந்தனர்.
Source, Image Courtesy: Dinamalar
https://www.dinamalar.com/news_detail.asp?id=2870847