கடலூர்: தில்லைநாயகபுரம் ஊராட்சி மன்ற இடைத்தேர்தலில் 2 வாக்குளில் வெற்றி பெற்ற பெண்!

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் கடந்த 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதே போன்று பிற மாவட்டங்களில் விடுப்பட்ட பதவிகளுக்கான தேர்தலும் நடைபெற்று முடிந்தது. அதன் முடிவுகளும் இன்று எண்ணப்பட்டு வருகிறது.

Update: 2021-10-12 09:15 GMT

இந்நிலையில், கடலூர் மாவட்டம் தில்லைநாயகபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில் 2 வாக்குகள் வித்தியாசத்தில் மகாவதி என்ற பெண் வெற்றி பெற்றுள்ளார். மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தில்லைநாயகபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த நாகூரான் என்பவர் காலமானதை தொடர்ந்து அந்த பதவிக்கு இடைத்தேர்தல் நடந்தது.

இதில் இதற்கு முன்னர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த நாகூரானின் மனைவி மகாவதி உட்பட 4 போட்டியிட்டனர். மொத்த 828 வாக்குகளில் மகாவதி 268 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கலையரசி 266 வாக்குகளை பெற்ற நிலையில் 2 வாக்குகள் வித்தியாசத்தில் மகாவதி வெற்றி பெற்றுள்ள சம்பவம் அந்த ஊராட்சியில் மட்டுமின்றி கடலூர் மாவட்டத்திலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Source, Image Courtesy: Polimer

Tags:    

Similar News