‘திருட்டு திமுக’.. ட்விட்டரில் ட்ரெண்டிங்.. இப்படி சுத்தி சுத்தி அடிச்ச நா எங்கதான் போறது.!

‘திருட்டு திமுக’.. ட்விட்டரில் ட்ரெண்டிங்.. இப்படி சுத்தி சுத்தி அடிச்ச நா எங்கதான் போறது.!

Update: 2020-11-22 17:52 GMT

திமுகவை பற்றி சமூக வலைளதங்களில் அடிக்கடி ட்ரெண்டிங் செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. கடந்த திமுக ஆட்சியில் நிலஅபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து, ரவுடிசம் போன்றவைகளை திமுக பிரதான தொழிலா செய்து வந்தது. இதனால் தமிழக மக்கள் நொந்து நூலானதுதான் மிச்சம்.
எங்கும் பார்த்தாலும் திமுகவினர் ரவுடிசம் செய்து நிலத்தை குறைந்த விலையை கொடுத்து, அல்லது அப்படியே திருடியும் வந்தனர். இது ஊரறிந்த உண்மையாகவும் இருந்தது.


இதனையடுத்து அதிமுக அரசு முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் கடந்த 2011ம் ஆண்டு பொறுப்பேற்றது. அப்போ திமுகவினர் மீது நில அபகரிப்பு புகார்கள் காவல் நிலையத்தில் மலைபோல குவியத் தொடங்கியது. இதற்காக அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா நில அபகரிப்புக்காக தனி பிரிவை தொடங்கி வைத்தார் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம்தான்.


இந்நிலையில், இன்று ட்விட்டரில் இந்திய அளவில் ‘திருட்டு திமுக’ என்ற ஹேஷ்டேக் முதலிடம் பிடித்துள்ளது. நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்தபோது கோ பேக் அமித்ஷா என்ற ஹேஷ்டேக்கை திமுகவினர் செய்தனர். அதற்கு பதிலடியாக வெல்கம் அமித்ஷா என்ற ஹேஷ்டேக்கை பாஜகவினர் ட்ரெண்டிங் செய்தனர். தற்போது இன்று மீண்டும் திருட்டு திமுக என்ற ஹேஷ்டேக் முதலிடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Similar News