நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து அவதூறு - வி.சி.க ஷர்மிளா நேரில் ஆஜராக போலீஸ் அதிரடி உத்தரவு!

Update: 2022-05-31 06:04 GMT

பா.ஜ.க.வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில செயலாளர் வசந்த் பாலாஜி என்பவர் ஆன்லைன் மூலமாக தேனி போலீசாருக்கு கடந்த மாதம் புகார் ஒன்று அனுப்பியிருந்தார். அதில் பிரபல தொலைக்காட்சி நடிகையும், வி.சி.க. திருப்போரூர் எம்.எல்.ஏ., எஸ்.எஸ்.பாலாஜியின் மனைவியுமான ஷர்மிளா என்பவர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பற்றி போலியான தொலைக்காட்சி கார்டு ஒன்றை அவரது ட்விட்டர் பதிவில் பகிர்ந்திருந்தார். எனவே தவறான கருத்தை சமூக வலைதளத்தில் பரப்பியதற்காகவும், மத்திய நிதியமைச்சர் மீது வேண்டும் என்றே இது போன்ற கருத்துக்களை அவர் பரப்பி வந்துள்ளார் என புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், சம்மந்தப்பட்ட எஸ்.பி. அலுவலகத்தின் வாயிலாக அவர் வசிக்கின்ற பகுதியில் இருக்கும் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட விசாரணையில் அது 'சைபர் கிரைம்' பிரிவின் கீழ் வருவதால், அப்புகார் உடனடியாக சைபர் கிரைமுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

அதன் படி தேனி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி இப்புகாரை விசாரித்தார். அதன் பின்னர் புகார் அளித்த பா.ஜ.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநிலச் செயலாளர் வசந்த் பாலாஜியிடமும் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நடிகை ஷர்மிளாவின் சர்ச்சை பதிவுகளை போலீசாரிடம் ஒப்படைத்தார் வசந்த் பாலாஜி. அதன்படி நடிகை ஷர்மிளாவை தேனி சைபர் கிரைமில் ஆஜராக வேண்டும் என்று போலீசார் உத்தரவிட்டனர்.

Source, Image Courtesy: Abp

Tags:    

Similar News