வார்டுகளில் பணிகள் ஒழுங்காக நடக்கவில்லை: கவுன்சிலர்கள் வெளிநடப்பு!

தென்காசி மாவட்ட பஞ்சாயத்து வார்டுகளின் பணிகள் ஒழுங்காக நடக்காததால் கவுன்சிலர்கள் வெளிநடப்பு.

Update: 2022-09-06 00:48 GMT

தென்காசி மாவட்ட வழக்கமான பஞ்சாயத்து  கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி தலைமை வகித்து நடத்தினார். மாவட்ட பஞ்சாயத்து செயலாளர் ருக்மணி முன்னிலை வகித்தார். மேலும் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர்கள் உதய கிருஷ்ணர் உள்ளிட்ட பல கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்களுடைய வார்டுகளில் நடக்கும் பிரச்சினைகளை பற்றி எடுத்துக் கூறினார்கள். ஏற்கனவே மே மாதம் 2022, 11 தேதி பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி எந்த ஒரு திட்டத்துக்கு நிதி ஒதுக்கினாலும் அதில் முறைகேடு இருப்பதாக கவுன்சிலர்கள் குற்றம்சாட்டிய இருப்பதும் குறிப்பிடத்தக்கது.


அதேபோல் தற்போது இப்போது நடைபெற்ற கூட்டத்தில் பதினைந்தாவது ஒன்றிய நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் வரப்பெற்ற மொத்தம் 5.41 கோடிகான திட்ட பணிகளுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. தீர்மானங்கள் முன்னதாக 11 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தார்கள். காரணம் திட்டத்திற்காக பணம் ஒதுக்கப்படுகின்றது.


ஆனால் வார்டுகளில் சரிவர வேலை நடப்பது இல்லை என்று பல்வேறு கவுன்சிலர்கள் குற்றம் சாட்டி உள்ளார்கள் இதன் காரணமாக அவர்களை சமாதானம் செய்து ஏழு கவுன்சிலர்களை முன்னுறுத்தி கூட்டம் நடந்தது. மக்களிடம் எங்கள் குறைகளை கூறுகிறார்கள் ஆனால் வார்டு கவுன்சிலர்கள் ஆன நாங்கள் அவர்களின் குறைகளை சரி செய்வதற்கு போதிய நிதி இல்லாததால் பல்வேறு சூழ்நிலைக்கு ஆளாகிறோம் என்று வெளிநடப்பு செய்த கவுன்சிலர்கள் தரப்பில் கூறப்பட்டது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News