கோடை காலம் தொடங்கிய பின்னர் மின்சாரம் உபயோகம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் மின்சாரத் தேவையானது வழக்கத்தை விட கூடுதலாக செலவாகும். இதனை ஈடு செய்ய போதுமான நிலக்கரி இல்லாமல் மின்வெட்டை சந்திக்க நேரிடலாம் என்ற செய்திகள் வெளிவருகிறது.
இதனை உணர்ந்து விரைவில் நடவடிக்கை எடுக்வில்லை எனில் தமிழகம் இருளில் மூழ்குவதை தடுக்க முடியாது என்று அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கூறியிருந்தது. இதனை உறுதி செய்யும் விதமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. காலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் மீண்டும் எப்போது வரும் என்று தெரிவதில்லை. இதனால் மின்துறை அலுவலர்களிடம் கேட்டால் அவர்களுக்கே தெரியாது என்ற பதிலை கேட்க முடிகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர்.
விரைவில் இதற்கு திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மிகப்பெரிய அளவிலான மின்வெட்டை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுவிடும். கடந்த அதிமுக ஆட்சியில் மின்வெட்டு ஏற்படுவதற்கு முன்பே செய்தித்தாள்களில் வெளியிடப்படும் அதன் பின்னரே மின்வெட்டு செய்யப்படும். ஆனால் திமுக ஆட்சி வந்தபின்னர் எப்போது வெண்டுமானாலும் மின்வெட்டு துண்டிக்கப்படுகிறது. அவர்கள் எப்போது மின்சாரம் கொடுக்கின்றார்கள் என்று மின்கம்பத்தை பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Asianet News