மாதம்தோறும் மின் கட்டண கணக்கீடு இப்போதைக்கு இல்லை - கைவிரித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி மாதந்தோறும் மின் கணக்கெடுக்கும் பணி இப்பொழுது இல்லை என கை விரித்துள்ளார் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.

Update: 2022-07-23 09:10 GMT

தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி மாதந்தோறும் மின் கணக்கெடுக்கும் பணி இப்பொழுது இல்லை என கை விரித்துள்ளார் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.

தமிழகத்தில் வீடு தோறும் மாதம்தோறும் மின் கணக்கெடுப்பு முறையை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செயல்படுத்துவோம் என தி.மு.க அரசு வாக்குறுதிகள் கூறி தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்டது. இந்த நிலையில் மாதம்தோறும் மின் கணக்கெடுக்கும் முறை இப்பொழுது அமலுக்கு வர வாய்ப்பு இல்லை என்பதை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

இதுகுறித்து மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது, 'வீடுகளுக்கு இரு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கெடுக்க ஊழியர்கள் செல்கின்றனர், தற்பொழுது 1000 ஊழியர்கள் இருக்கிறார்கள், மாதந்தோறும் கணக்கெடுக்க 2000 பேர் தேவை என ஊழியர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக வேண்டும். டிரான்ஸ்பார்மரில் மீட்டில் பொருத்துவதற்கான அறிவிப்பு, வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன ஸ்மார்ட் மீட்டர் பொருத்திவிட்டால் கணக்கெடுக்கும் ஊழியர்கள் வேலை கேள்விக்குறியாகிவிடும், இதில் ஏதேனும் ஒன்றுதான் கொண்டுவர முடியும் எனினும் அனைத்து வீடுகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர் விரைவாக பொருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தியதும், தி.மு.க'வின் தேர்தல் வாக்குறுதியான மாதந்தோறும் கணக்கெடுக்கும் பணி செயல்படுத்தப்படும் இன்னும் ஐந்து ஆண்டுகள் அவகாசம் உள்ளது' என தெரிவித்துள்ளார்.

இவர் கூறுவதை வைத்து பார்க்கும் பொழுது தி.மு.க'வின் தேர்தல் வாக்குறுதியான மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை இப்போதைக்கு வர வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.


Source - Dinamalar

Similar News