காங்கிரசின் உட்கட்சி பூசலை மறைக்க என் மீது பழி சுமத்துகின்றனர்! - அமிரிந்தர் சிங்!

பஞ்சாப் மாநில காங்கிரசில் எழுந்துள்ள உட்கட்சிப் பூசலை சரிவர கையாளத் தவறியதை மறைப்பதற்காக மிகப்பெரிய அளவில் பொய்களை கட்சியினர் கூறி வருகின்றனர் என்று அமரிந்தர் சிங் விமர்சனம் செய்துள்ளார்.

Update: 2021-10-03 03:49 GMT

பஞ்சாப் மாநில காங்கிரசில் எழுந்துள்ள உட்கட்சிப் பூசலை சரிவர கையாளத் தவறியதை மறைப்பதற்காக மிகப்பெரிய அளவில் பொய்களை கட்சியினர் கூறி வருகின்றனர் என்று அமரிந்தர் சிங் விமர்சனம் செய்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபோது அமரிந்தர் சிங் மற்றும் காங்கிரஸ் மாநிலத் தலைவர் சித்துவுடன் மோதல் ஏற்பட்டு பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சரன்ஜித் சிங் நியமனம் செய்யப்பட்டார். இதனிடையே அமரிந்தர் சிங் பாஜகவில் இணைவார் என்று பேச்சு அடிப்பட்டது. ஆனால் அதனை அமரிந்தர் சிங் மறுத்தார். இதனால் அம்மாநில காங்கிரசில் நாளுக்கு நாள் குழப்பங்கள் நீடித்தது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில், அமரிந்த சிங்கை முதலமைச்சர் பதவியில் இருந்து சோனியா நீக்கவில்லை. 78 எம்.எல்.ஏ.க்கள்தான் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்கள். இதன் காரணமாகத்தான் அவர் ராஜினாமா செய்தார் என்றார்.

இந்நிலையில், ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவின் விமர்சனத்துக்கு பதில் அளித்துப் பேசிய அமரிந்தர் சிங், காங்கிரஸ் கட்சி முழுவதும் குழப்பமான சூழ்நிலையில் இருக்கிறது. சோனியாவுக்கு 43 எம்.எல்.ஏ.க்கள் கடிதம் எழுதியாக மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரீஷ் ராவத் கூறியிருந்தார். ஆனால் 78 எம்.எல்.ஏ.க்கள் என்று ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகிறார். இதில் இருந்தே இவர்கள் என்ன மாதிரியான குழப்ப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று தெரிகிறது. பஞ்சாப் காங்கிரஸ் உட்கட்சி பூசலை மறைப்பதற்காக இது போன்று பேசி வருகின்றனர் என்றார்.

Source: Puthiyathalamurai

Image Courtesy: Business Standard


Tags:    

Similar News