'திருமாவளவன் சார் மோடி இந்த நாட்டின் ஹீரோ' - என உரக்க கூறி பிரதமரை அவதூறாக பேசிய திருமாவளவனை விரட்டி அடித்த பொதுமக்கள்

கர்நாடகத்தில் பொதுமக்கள் முன்னிலையில் பிரதமர் மோடியை விமர்சித்த திருமாவளவனை அங்கிருந்த மக்கள் விரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2022-05-04 07:00 GMT

கர்நாடகத்தில் பொதுமக்கள் முன்னிலையில் பிரதமர் மோடியை விமர்சித்த திருமாவளவனை அங்கிருந்த மக்கள் விரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் சர்ஜாபூர் என்ற இடத்தில் பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நிகழ்ச்சி ஒன்றுக்கு அம்பேத்கரின் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர், இந்த விழாவில் கலந்து கொள்ள தமிழகத்தில் இருந்து திருமாவளவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் அந்த நிகழ்ச்சிக்கு சென்றார்.

சென்றவர் அங்கு தமிழக மேடை பேச்சு நினைப்பில் பேசியுள்ளார், அங்கு அவர் பேசும் போது நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக பேசியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் திருமாவளவனுக்கு எதிர்ப்பு தெரிவித்து நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றினர். அவருக்கு அளித்த கேடயத்தையம் அவரிடம் இருந்து வாங்கி கொண்டனர். அப்போது மேடையில் மைக் பிடித்த ஒருவர், 'திருமாவளவன் சார், மோடி இந்த நாட்டின் ஹீரோ, அவரை பற்றி நீங்கள் இஷ்டத்திற்கு பேசி அவதூறு செய்ய வேண்டாம்' என உரக்க கூறினார். மோடி இந்த நாட்டின் ஹீரோ என்ற முழக்கத்தை கேட்டுக்கொண்டே மேடையில் இருந்து வெளிறிய முகத்துடன் திருமாவளவன் வெளியேறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Source - Thamarai TV 

Similar News