திருவாரூர்: பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத தி.மு.க.வை கண்டித்து கொட்டும் மழையிலும் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்!

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி திமுக அரசுக்கு எதிராக கொரடாச்சேரியில் கொட்டும் மழையிலும் பாஜகவினர் மாட்டு வண்டியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் மக்களின் கவனத்தை ஈர்த்தது.

Update: 2021-11-28 04:34 GMT

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி திமுக அரசுக்கு எதிராக கொரடாச்சேரியில் கொட்டும் மழையிலும் பாஜகவினர் மாட்டு வண்டியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் மக்களின் கவனத்தை ஈர்த்தது.

மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை சமீபத்தில் குறைத்தது. இதனால் 20 ரூபாய் வரைக்கும் விலை குறைந்தது. அதனை பின்பற்றி மற்ற மாநிலங்களும் தங்களின் மாநில வரியை குறைத்தது. இதனால் பெட்ரோல், டீசல் மீதான விலை வெகுவாக குறைந்தது. ஆனால் தமிழகத்தில் மத்திய அரசு குறைத்த வரியை தவிர மாநில அரசு வரியை குறைக்காமல் ஏமாற்றி வருகிறது. எனவே மற்ற மாநிலங்கள் வரியை குறைத்தது போன்று திமுக அரசும் குறைக்க வேண்டும் என்று தமிழக பாஜகவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே போன்று திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் பாஜக விவசாய அணி சார்பில் மாட்டு வண்டி ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட விவசாய அணி தலைவர் கார்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கோட்டூர் ராகவன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம், மேலிட பார்வையாளர் பேட்டை சிவா, கண்ணன், மாநில விவசாய அணி செயலாளர் கோவி சந்துரு, மாநில விவசாய அணி துணைத்தலைவர் சிவ.காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு திமுக அரசு உடனடியாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி பேசினர். மாவட்ட பொதுச்செயலாளர் செல்வம், மாவட்ட துணைத்தலைவர் செந்தில் அரசன், மாவட்ட நிர்வாகிகள் மணி, சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

முன்னதாக கொரடாச்சேரி கடைவீதி வழியாக கோரிக்கைகளை வலியுறுத்தி மாட்டு வண்டியில் கட்சியினர் ஊர்வலமாக மழையை பொருட்படுத்தால் சென்றனர். இதில் மழையை பொருட்படுத்தாமல் மக்களுக்காக போராட்டத்தில் கலந்து கொண்டு தொண்டர்களும் திமுகவை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News