காய்கறி விற்பவர் தேர்தலில் போட்டி - இது பா.ஜ.கவில் மட்டுமே சாத்தியம்.!

காய்கறி விற்பவர் தேர்தலில் போட்டி - இது பா.ஜ.கவில் மட்டுமே சாத்தியம்.!

Update: 2020-11-26 12:55 GMT

கட்சியில் அந்த நிலையில் இருப்பவர்களும் உயர் பதவிகளை அடையலாம், தேர்தலில் போட்டியிடலாம் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது பா.ஜ.க. எதிர்க்கட்சிகள் பாசிச கட்சி, மதவாதக் கட்சி என்றெல்லாம் பிரச்சாரம் செய்த போதும் இந்தியர்கள் அனைவருக்குமான கட்சி பா.ஜ.க என்பதும் தொடர்ந்து நிரூபணமாகி வருகிறது.

அண்மையில் இரு முஸ்லிம் பெண்கள் கேரள உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட இருக்கும் செய்தி ஊடகங்களில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. அந்தப் பெண்கள் இருவருமே மோடியின் வளர்ச்சி அரசியல் பிடித்ததாலேயே பா.ஜ.கவில் இணைந்ததாகக் கூறினர். முத்தலாக்கை ஒழிக்க சட்டம் இயற்றியது பெண்களின் திருமண வயதை அதிகரிக்க இருப்பது போன்ற புரட்சிகளைப் பற்றியும் அவர்கள் குறிப்பிட்டனர்.
 

இந்த நிலையில் தற்போது காய்கறி விற்கும் பெண் ஒருவரை கேரள பா.ஜ.க பஞ்சாயத்து தேர்தலில் நிறுத்தி இருக்கும் தகவல் வெளியாகி உள்ளது. திருவனந்தபுரத்தில் சாலையோரம் காய்கறிக் கடை நடத்தும் கிரிஜா என்பவரை பா.ஜ.க திருப்புரம் பஞ்சாயத்து தேர்தலில் நிற்க வைத்துள்ளது. அடிமட்டத்தில் இருந்து வருபவர்களுக்கு பா.ஜ.கவில் திறமையைப் பொறுத்து பரிசும் பதவியும் நிச்சயம் என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Similar News