இனிதான் ஆரம்பம் - திருச்செந்தூரில் நடைபயணம் துவங்கும் அண்ணாமலை
வரும் ஏப்ரல் 14ஆம் தேதி திருச்செந்தூரில் நடை பயணத்தை தொடங்குகிறார் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
வரும் ஏப்ரல் 14ஆம் தேதி திருச்செந்தூரில் நடை பயணத்தை தொடங்குகிறார் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. தமிழக முழுவதும் முழு வீச்சில் நடை பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் சக்தியை ஒருங்கிணைக்க வேண்டும் எனவும் தேசிய சிந்தனை கொண்ட வாக்காளர்களை பாஜகவின் பக்கம் கவர வேண்டும் எனவும் பல திட்டங்களை தீட்டி தமிழகம் முழுவதும் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் பாதயாத்திரை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். இந்த பாதயாத்திரையை அவர் முடிவெடுத்த காரணம் முதலில் மக்களை சந்திக்க வேண்டும் பிறகு ஆளும் திமுக அரசு மக்களுக்கு எந்தவிதமான ஊழலை செய்து மக்களின் வரிப்பணத்தை ஏமாற்றுகிறது என்னவும் போலியான வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மின்துறை ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள், குடும்பத்தலைவிகள் ஆகிய அனைவரையும் ஏமாற்றி எப்படி ஆட்சியில் உட்கார்ந்து கொண்டு மக்களை வதைக்கிறது என மக்களிடம் எடுத்துரைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
குறிப்பாக கோபாலபுரம் குடும்பம் எப்படி திமுகவை என்ற சக்தியை திராவிட மாடல் என்ற பெயரை வைத்துக் கொண்டு தமிழக மக்களை ஏமாற்றி பிழைக்கிறது எனவும் மக்களிடம் பரப்புரை செய்வதற்காக அண்ணாமலை மிகப்பெரிய திட்டத்துடன் நடை பயணத்தை தொடங்க உள்ளார். வரும் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு அன்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் முருகனைக் கும்பிட்டு துவங்கும் பாதையாத்திரை 117 நாட்களுக்கு தொடர்ச்சியாக நடக்க உள்ளது.
இதுகுறித்து பாஜக வட்டாரங்களில் அவ்வப்போது பேச்சு எழுந்து வந்த நிலையில் இன்று கடலூரில் நடைபெறும் கூட்டத்தில் அதற்கான அறிவிப்பை மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். இது குறித்து பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தினமும் ஏதாவது ஒரு கிராமத்தில் தொண்டர்களோடு சேர்ந்து அண்ணாமலை தங்குவார். அதற்காக தற்காலிக முகாம் அமைக்கப்படும் எனவும் தினமும் பொதுமக்களுடன் சேர்ந்த அண்ணாமலை சாப்பிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.