மக்களுக்காக இல்லை இந்த போராட்டம், சோனியா குடும்பத்தை காப்பாற்றவே இந்த போராட்டம் - பா.ஜ.க கடும் கண்டனம்

விலைவாசி உயர்வுக்காக என்பது வெறும் சாக்குபோக்கு சோனியா குடும்பத்தை பாதுகாக்கவே காங்கிரசார் போராட்டம் பா. ஜனதா கடும் கண்டனம்

Update: 2022-08-06 07:30 GMT

பாரதிய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் சட்ட மந்திரியுமான ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காங்கிரசார் போராட்டத்துக்கு விலைவாசி உயர்வும் வேலை இல்லா திண்டாட்டமும் வெறும் சாக்குப் போக்கு தான். அடிப்படைக் காரணம் எதுவென்றால் அமலாக்கத்துறையை மிரட்டவும் சோனியா குடும்பத்தை பாதுகாப்பதும் எதிர்க்கட்சிகள் தங்கள் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப அனுமதிக்கப்படவில்லை என்று ராகுல்காந்தியயின் குற்றச்சாட்டு பொய்யானது.

ஏனெனில் விலைவாசி உயர்வு குறித்த விவாதத்தின் போது காங்கிரஸ் உறுப்பினர்களும் பேசினர் இந்திய மக்கள் உங்களை மீண்டும் மீண்டும் நிராகரிப்பதற்கு எதற்கு ஜனநாயகத்தை குற்றம் சொல்கிறீர்கள்?

சில நல்ல தலைவர்களை கொண்ட உங்கள் கட்சிக்குள் ஜனநாயகம் இருக்கிறது. எல்லாம் காந்தி குடும்பமாகவே உள்ளனர் .

உங்கள் ஊழல் மற்றும் தவறான செயல்களை பாதுகாப்பதற்காக இந்திய நிறுவனங்களை இழிவுபடுத்துவதை நிறுத்துங்கள் உங்கள் பேச்சை கேட்கவில்லை என்றால் எங்களை ஏன் குற்றம்சாட்டுகிறார்கள்?

இந்திய மக்கள் சர்வாதிகாரத்தை பார்த்தது உங்கள் பாட்டியும் முன்னாள் பிரதமருமான இந்திராகாந்தியின் ஆட்சியில் தான்.அவர்தான் அவசர நிலையை பிறப்பித்து மக்களின் அடிப்படை உரிமைகளை பறித்தார் .

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் மீதான குற்றச்சாட்டை ரத்து செய்ய நீதிதத்துறை மறுத்துள்ளது. ஆனால் ராகுல் காந்தி இந்திய நிறுவனங்களை குற்றம் சாட்டுகிறார் இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

இதேபோல மத்திய மந்திரி அனுராக் தாக்கூரும் காங்கிரஸ் தலைவர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.





 


Similar News