"அரசு அதிகாரியை தாக்கிய தி.மு.க எம்.எல்.ஏ' வை கைது செய்க!" ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!

Update: 2022-01-28 06:58 GMT

சென்னை திருவொற்றியூரில் சாலை அமைக்கின்ற பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சிப் பொறியாளரை திமுக எம்.எல்.ஏ., சங்கர் அவரது ஆதரவாளர்களுடன் தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் எம்.எல்.ஏ.,வின் செயலுக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. 

இந்நிலையில், பாமக எம்.பி., அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில், சென்னை திருவொற்றியூரில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சிப் பொறியாளரை திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.சங்கரும், அவரது ஆதரவாளர்களும் தாக்கியுள்ளனர். 13 லாரிகளில் வந்த தார் ஜல்லிக் கலவையையும் திருப்பி அனுப்பியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. சென்னை மாநகராட்சி பொறியாளர் உள்ளிட்ட பணியாளர்களை தாக்கியதும், சாலை அமைக்கும் கருவிகளை சூறையாடியதும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்கள். ஒரு மக்கள் பிரதிநிதியே இத்தகைய செயல்களில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது. இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்க மாநகராட்சி தயங்குவது ஏன்?

தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இதேபோன்ற செயல்கள் தமிழகம் முழுவதும் அதிகரிக்க விடும். உடனடியாக மாநகராட்சியிடம் புகார் பெற்று திமுக சட்டமன்ற உறுப்பினர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source: Twiter

Image Courtesy: Times Now

Tags:    

Similar News