இதுவரைக்கும் நடந்தது சம்பவம் இல்லை.. இனிமேதான் சம்பவமே..! இன்று துவங்கும் யாத்திரையில் என்னதான் ஸ்பெஷல்?
அதிரப்போகும் களம்...! இன்று முதல் ஆரம்பமாகும் யாத்திரை...! கசிந்த சிறப்பு தகவல்கள்...!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முதற்கட்டமாக யாத்திரையை முடித்துவிட்டு மீண்டும் அடுத்த கட்ட யாத்திரையை விரைவில் துவங்குவேன் என்று அறிவித்திருந்தார், பிரதமர் மோடியின் ஒன்பது ஆண்டு கால சாதனைகளை பரப்புவதற்காக அண்ணாமலை யாத்திரை கடந்த செப்டம்பர் மாதம் ராமேஸ்வரத்தில் ஆரமித்தார், உள்துறை அமைச்சர் அமித்ஷா துவங்கிவைத்த இந்த யாத்திரை கிட்டத்தட்ட தென் மாவட்டங்கள் அனைத்தும் முடிந்துவிட்டது..
இந்த நிலையில் தற்பொழுது மேற்கு மண்டலமான கோவையில் கடந்த மாதம் இறுதியில் யாத்திரை நிறைவடைந்தது, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு யாத்திரைக்கு சிறிது காலம் ஓய்வு கொடுத்திருந்த நிலையில் அண்ணாமலையின் டெல்லி பயணம், அதன் பின் அவருக்கு ஏற்பட்ட சில உடல் நல குறைபாடுகள் போன்றவை காரணமாக யாத்திரை தள்ளிப்போனது.
இந்த நிலையில் இன்று மீண்டும் யாத்திரை அவினாசியில் துவங்கி இருக்கிறது, அதனை தொடர்ந்து இந்த யாத்திரை பல்லடத்தில் 19ஆம் தேதி, திருப்பூர் வடக்கு, தெற்கு தொகுதிகளில் அக்டோபர் 20ஆம் தேதி நடக்கவிருக்கிறது. திருப்பூரில் மூன்றாம் கட்ட யாத்திரை தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பங்கேற்க உள்ளார்.
அதிமுக-பாஜகவின் கூட்டணி முடிவு, மேலும் தற்பொழுது திமுக தரப்பில் முழு வீச்சுடன் கூட்டணி பேச்சு வார்த்தை தேர்தல் வேலைகள் என இறங்கி இருக்கும் சமயத்தில் இதற்கு முன்பு நடைபெற்ற யாத்திரைகளில் அண்ணாமலை பங்கேற்று செயல்பட்டதை விட இந்த யாத்திரையில் எப்படி பங்கேற்று செயல்பட போகிறார் என ஆர்வம் எழுந்துள்ளது பொதுமக்களுக்கு.
அது மட்டுமல்லாமல் கொங்கு மண்டலத்தில் இருந்து யாத்திரை மெல்ல மெல்ல திருச்சி மத்திய மண்டலம் மற்றும் டெல்டா மண்டலம் ஆகிய பகுதிகளில் யாத்திரை நடைபெற இருக்கிறது, பின்பு கடலூர், விழுப்புரம் வழியாக திருவண்ணாமலை, வேலூர் சென்று இறுதியாக சென்னை சென்று முடிவடையும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.