2ஜி் ஊழலில் திழைத்த தி.மு.க, காங்கிரஸ் தமிழகத்திற்கு வேண்டவே வேண்டாம் - பா.ஜ.க எம்.பி பொளேர்!
சென்னை கோயம்பேட்டில் உள்ள பா.ஜ.க தேர்தல் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பா.ஜ.க MP ராஜீவ் சந்திரசேகர் கலந்துக்கொண்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். இதில் தமிழக பா.ஜ.க துணைத்தலைவர் சக்கரவர்த்தி, பா.ஜ.க தமிழக செய்தித் தொடர்பாளர் S G சூர்யா உட்பட ஏராளமான பா.ஜ.கவினர் கலந்துக் கொண்டனர்.
அப்போது பேசிய திரு ராஜீவ் சந்திரசேகர் முக்கியமான கருத்துக்களை முன்வைத்தார். அதன் சாராம்சம்: "சமீபத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின், சிங்காரச் சென்னையைப் பற்றி பேசியதையும் ராகுல் காந்தி ஒரு பள்ளியில் நடனமாடியதையும் நான் கண்டேன். தமிழ் மக்களின் ஓட்டுகளை பெறுவதற்காக இத்தகைய நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் காங்கிரஸ், தி.மு.க ஏற்கனவே கூட்டணி வைத்துள்ளது. அவர்களுடைய கடந்த கால 'சாதனைகளை' மக்களிடம் புரிய வைக்க வேண்டியது அவசியம்.
தி.மு.க தலைவர் ஸ்டாலின் சென்னையில் 11 எம்.எல்.ஏ-க்களை வைத்துக்கொண்டு சிங்காரச் சென்னையை பற்றி பேசுகிறார். ஐந்து வருடம் காங்கிரஸுடன் ஆட்சி புரிந்து புதுச்சேரியை சீரழிவிற்கு உள்ளாக்கி விட்டு தற்போது சிங்காரச் சென்னை கொண்டு வருவோம் என்று பேசுகிறார். காங்கிரஸுடன் கூட்டணி வைத்து பத்து வருடங்களில் ஊழல் மூலம் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் சிதைவுக்கு உள்ளாக்கி நாட்டின் வங்கி சிஸ்டத்தையே பாதிப்பு அடைய வைத்துள்ளனர்.
பத்து வருடங்களாக கூட்டாளிகளாக இருந்து தாங்கள் ஆட்சி புரிந்ததைப்பற்றி அவர்கள் ஏன் பேச மறுக்கிறார்கள்? நாம் பேச வேண்டியதெல்லாம் 2004 முதல் 2014 வரை அவர்கள் நடத்திய மோசமான ஆட்சியைப் பற்றித் தான், அப்போது நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் சீரழித்து விட்டனர். 2004-ஆம் ஆண்டில் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் விட்டுச் சென்றது ஒரு வலுவான பொருளாதாரத்தை.
2005-இல் முக்கிய காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் கூட இது நம் நாடு எப்போதும் கண்டிராத மிக வலுவான பொருளாதாரம் என்று குறிப்பிட்டிருந்தார். அவர்கள் இதைப் பற்றி ஏன் பேச மறுக்கிறார்கள்? காங்கிரஸ், தி.மு.க ஆட்சியில் பேச வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் ஸ்பெக்ட்ரம். (அலைக்கற்றை). தற்பொழுது கொரானா வைரஸினால் ஏற்பட்ட ஊரடங்கு பிரச்சனைகளை காட்டிலும் 2008-ஆம் ஆண்டு பொருளாதார சீரழிவு தாக்கங்கள் மிக அதிகமாக இருந்தது. இந்நிலையில் காங்கிரசும் தி.மு.க-வும் சேர்ந்து விலைமதிப்பில்லாத அலைக்கற்றைகளை சில கார்ப்பரேட்டுகளுக்கு இலவசமாக கொடுக்க முடிவு செய்தது. நான் அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்தேன்.