"சி.எம் கேட்டால் கொரோனா விழிப்புணர்வு கூட்டம் என சமாளித்துவிடுவேன்..!" - முதல்வரை ஏமாற்ற திட்டம் போடும் அமைச்சர் அன்பில் மகேஷ்!
TN Education Minister Anbil Mahesh’s Covid quote courts controversy
மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இது கோவிட் விழிப்புணர்வு கூட்டம் என்று முதல்வரிடம் கூறுவேன் என்று கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது. .
தனியார் திருமண மண்டப திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம் முருகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தலைமைக் கழகத் தலைவர் கோவி செழியன் தலைமை வகித்தார். இதில் திமுகவினர் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசு பொதுக்கூட்டங்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது மற்றும் திருமணம் போன்ற நிகழ்வுகளில் பங்கேற்கக்கூடிய நபர்களின் எண்ணிக்கைக்கு உச்ச வரம்பை நிர்ணயித்துள்ளது. இருந்தும், இவ்வளவு பெரிய கூட்டத்தில் நான் ஏன் பங்கேற்றேன் என்று முதல்வர் என்னிடம் நிச்சயம் கேள்வி கேட்பார். இந்த நிகழ்வை கோவிட் மற்றும் ஓமிக்ரான் பற்றிய விழிப்புணர்வு கூட்டமாக மாற்றினோம் எனவும், நாங்கள் திருமண மண்டப திறப்பு விழா மட்டுமல்ல, கோவிட் விழிப்புணர்வு கூட்டத்தையும் நடத்தினோம் என்று முதல்வரிடம் கூறுவேன்" என அமைச்சர் கூறினார்.
நிகழ்வில் பலர் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியின்றி காணப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க இந்தியன் எக்பிரஸ் ஊடகம் அழைத்த நிலையில், செய்தியாளர்களின் அழைப்புகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளிக்கவில்லை.