ஆளுநர் பதவி ஏற்பு விழாவை புல்வெளி அரங்கில் நடத்த ஏற்பாடு!
தமிழகத்திற்கு புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்று இரவு விமானம் மூலம் சென்னை வருகை தந்தார். இவர் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியுள்ளார். அது மட்டுமின்றி உளவுப்பிரிவின் சிறப்பு இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
தமிழகத்திற்கு புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்று இரவு விமானம் மூலம் சென்னை வருகை தந்தார். இவர் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியுள்ளார். அது மட்டுமின்றி உளவுப்பிரிவின் சிறப்பு இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு முதல் நாகலாந்து ஆளுநராக பதவி வகித்து வந்தார். தற்போது அங்கிருந்து தமிழகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்காக டெல்லியில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு விமானம் மூலம் வந்த ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அவருடன் தமிழக தலைமைச்செயலர் மற்றும் டிஜிபி அமைச்சர்கள் உடனிருந்தனர்.
இதன் பின்னர் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு ஆர்.என்.ரவி சென்றார். அவருக்கு ஆளுநர் மாளிகையின் மெயின் வாசல் பகுதியில் இருந்து தமிழக காவல் துறையின் குதிரைப்படை சார்பில் அணிவகுப்புடன் ஆளுநர் அழைத்து செல்லப்பட்டார்.
இந்நிலையில், நாளை (18ம் தேதி) காலை 10.35 மணியளவில் பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. அங்கு தர்பார் மண்டபம் அருகே உள்ள திறந்தவெளி புல்வெளி அரஙகில் பந்தல் போடப்பட்டு விழா நடைபெறுகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ்பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் உள்ளிட்ட பிரபலங்களும் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Maalaimalar