மதுரை விமான நிலைய திட்டத்திற்கு தமிழக அரசு இடம் தரவில்லை - ஜே.பி நட்டா குற்றச்சாட்டு!

மதுரை விமான நிலையம் விரிவாக்க திட்டத்திற்கு தமிழக அரசு போதிய இடம் தரவில்லை என்று பா.ஜ.க தலைவர் ஜே.பி நட்டா குற்றச்சாட்டு.

Update: 2022-09-24 02:32 GMT

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ளார். டெல்லியில் இருந்து தனி விமான மூலம் ஒரு மணி அளவில் வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அதனை தொடர்ந்து அவர் ரிங் ரோடு பகுதியில் தனியார் கூட்டலில் பல்வேறு துறை வல்லுநர்கள் மற்றும் தொழிலாளர் அதிபர்களுடன் கலந்துரையாடல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பேசிய ஜே.பி.நட்டா அவர்கள் இந்திய நாட்டை சரியாக அரசு ஆட்சி செய்கிறது. தமிழகத்திலும் அதன் வளர்ச்சி காண முடிகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.


காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பிடும் பொழுது பா.ஜ.க ஆட்சியில் அந்நிய நேரடி முதலீடு அதிகரித்து உள்ளது. இந்தியாவின் மின்னணு ஏற்றுமதி இரட்டிப்பாக உள்ளது பார்க்க முடிகிறது. தற்போது நம் நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளரும் பொருளாதாரமாக மாறி இருக்கிறது. மேலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு முந்தைய பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்து உள்ளன. மதுரையில் செயல்பட தொடங்கியதும் மாணவர்கள் சேர்க்கை இடங்களில் 100 சதவீதத்திலிருந்து 250 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்று குறிப்பிட்டு இருந்தார்..மேலும் விமான மதுரை விமான நிலையத்தில் சர்வதேச விமான நிலையமாக மாற்ற 550 கோடி மத்திய அரசு ஒதுக்கியது.


மத்திய அரசு 633.17 ஏக்கர் நிலத்தை கேட்ட பொழுது, தமிழக அரசு 543 கொடுத்தது தேவையான இடத்தை தமிழக அரசு கொடுக்கவில்லை இருந்தும் சர்வதேச விமான நிலையத்திற்கான கட்டுமான பணிகளை மத்திய அரசு தற்போது மேற்கொண்டு வருகின்றது என்று அவர் கூறுகிறார். மேலும் இது மட்டும் இன்றி மதுரையில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்க 732 கோடி, மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கான 392 கோடி, மதுரை மல்லிக்கான ஏற்றுமதி நிலை அதிகரிப்பு உள்ளிட்ட பல திட்டங்கள் மதுரைக்காக மத்திய அரசு செய்துள்ளது. கழிவறை கட்டும் திட்டத்தின் வாயிலாக நாட்டின் 11.88 கோடி குடும்பங்கள் பயனடைந்துள்ளன. உஜ்வாலா திட்டத்தின் மூலம் இலவச காஸ் இணைப்பு மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.

Input & Image courtesy: News 18

Tags:    

Similar News