தமிழகத்தில் ஷவர்மா'விற்கு தடையா? மா.சுப்பிரமணியன் கூறிய முக்கிய தகவல்!

Update: 2022-05-08 06:29 GMT

கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வருவதை தடுக்கின்ற நோக்கில் தமிழகம் முழுவதும் இன்று தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: ஷவர்மா போன்று வெளிநாட்டு உணவு முறைகளை மக்கள் தவிர்ப்பது நல்லது. இது அவர்கள் நாட்டில் உள்ள தட்பவெப்ப நிலைக்கே பொருந்தும். எனவே ஷவர்மா தயாரிப்பதற்கான உரிய வழிகாட்டு முறைகளை கடைப்பிடிக்கவில்லை எனில் அதனை சாப்பிடும் நபர்களுக்க பாதிப்புகளை ஏற்படுத்தும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இதனிடையே கேரளா மாநிலத்தில் கடந்த வாரம் ஷவர்மா சாப்பிட்ட ஒரு குடும்பமே உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 17 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உயிரிழந்து விட்டார். இந்த மரணம் நாடு முழுவதும் எதிரொலித்தது. இதனால் பெரும்பாலானவர்கள் ஷவர்மா சாப்பிடுவதற்கே பயந்து வருகின்றனர். பழைய சிக்கனை வைத்து மீண்டும் சமைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் மக்கள் ஷவர்மா போன்ற சிக்கன் ஐட்டங்களை சாப்பிடுவதை தவிர்த்து வருகின்றனர்.

Source: abp

Image Courtesy:Zee News

Tags:    

Similar News