தமிழகத்தில் அனைத்து மாணவர்களும் நீட் தேர்வை விரும்புகிறார்கள் - அண்ணாமலை!
தமிழகத்தில் உள்ள மாணவர்கள் அனைவரும் நீட் தேர்வை விரும்புகிறார்கள் என்று பா.ஜ.க. மாநில தலைவர் கே.அண்ணாமலை கூறியுள்ளார்.
கும்பகோணத்தில் மத்திய அரசின் 8 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்வதற்கு முன்பாக செய்தியாளர்ளை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு விவேகானந்தர் பெயரை சூட்ட வேண்டும் எனவும், கும்பகோணம் ரயில் நிலையத்தில் ரயில்வே அருங்காட்சியகம் அமைக்க வேண்டும், கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் ஒன்று அமைக்க வேண்டும். அது போன்று அமைக்கும் பட்சத்தில் மதுராவை போன்று ஆன்மீக மாவட்டமாக கும்பகோணம் மாறும். இதனால் சுற்றுலாத்துறையும் மேம்படும்.
தொடர்ந்து பேசிய அவர், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அதிகமாக உள்ளனர். இதனால் தமிழகத்தில் நீட் தேர்வை விரும்புவதாகவும், நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் 58 சதவீதம் பேர் பயிற்சி வகுப்பிற்கு செல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: News 7 Tamil