இந்து கடவுள் காளி பற்றி கூறியதற்கு மஹுவா மொய்த்ரா மீது பாய்ந்த திரிணாமுல் காங்கிரஸ்
காளி என்னை பொறுத்தமட்டில் இறைச்சி சாப்பிடும், மதுவை ஏற்றுக்கொள்ளும் தெய்வம் என மஹுவா மொய்த்ரா கூறிய கருத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆவணப்படங்களை இயக்கி வரும் லீனா மணிமேகலை தற்போதைய நிலையில் காளி என்ற டெலி ஃபிலிம் இயக்கி வருகிறார். அந்த படத்தின் போஸ்டரில் காளி வேடமணிந்திருந்த பெண் ஒருவர் வாயில் சிகரெட் வைத்துக்கொண்டும், கொடியைப் பிடித்திருப்பதும் இருந்தது. இந்த போஸ்டருக்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றது. உடனடியாக லீனா மணிமேகலையைக் கைது செய்யவும் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில், லீனா மணிமேகலைக்கு ஆதரவாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா பேசும்போது, காளி என்னைப் பொறுத்தமட்டில் இறைச்சி சாப்பிட்டும், மதுவை ஏற்றுக்கொள்ளும் தெய்வம் ஆகும். உங்களின் தெய்வத்தை கற்பனை செய்வதற்கு உங்களுக்கு சுதந்திரம் இருக்கிறது. மேலும், ஒரு சில இடங்களில் கடவுள்களுக்கு மது வழங்கப்படும், வேறு சில இடங்களில் தெய்வ நிந்தனையாக இருக்கும். சிக்கிம் உள்ளிட்ட இடங்களில் காளி தேவிக்கு மதுவைப் வழங்கி வருகின்றனர். எனவே உங்களின் தெய்வத்துக்கு நீங்களே அனைத்திற்கும் காரணம் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், மஹுவா மொய்த்ரா-வின் கருத்துக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. அவர் சார்ந்திருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மஹுவா மொய்த்ராவின் கருத்து அவருடைய தனிப்பட்டவை ஆகும். எனவே இதற்கும் கட்சிக்கும் சம்மந்தம் இல்லை. அவரது செயலுக்கு கடும் கண்டனம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
Source, Image Courtesy: Vikatan